
பில் கேட்ஸ், கொடையாளர் மற்றும் மைக்ரோசாஃப்ட் முன்னாள் சிஇஓ
( Mar 20, 2025 )
அது மிகவும் உற்சாகமான நேரம் என்று நான் நினைக்கிறேன்….1997-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழுநேர சிஇஓ - ஆக இருந்தபோது முதன்முறையாக நான் இங்கு (இந்தியா) வந்தேன். இந்தியாவிலிருந்து நாங்கள் பணிக்கு அமர்த்தியவர்களை ஏற்கனவே நான் பார்த்திருந்தேன். அவர்கள் மிகவும் வியப்பூட்டுபவர்களாக இருந்தனர். நான் இங்கே வந்தபோது உள்கட்டமைப்பிலும் கல்வியிலும் முதலீடு செய்துள்ள ஒருநாடு இது என்பதை நான் பார்த்தேன். இந்த நாடு ஒரு நாள் வல்லரசாக மாறும் என்று நான் நினைத்தேன்… அதனை வெகுவிரைவிலேயே அது சாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை.