1. ANI-க்கு பேட்டி அளிப்பதற்காக பிரதமருக்கு நன்றி. அரசின் ஓராண்டு பூர்த்திக்குப் பாராட்டுக்கள். 1 – 10 என்ற மதிப்பீட்டில் உங்களுடைய அரசின் செயல்பாட்டுக்கு எவ்வளவு மதிப்பெண் தருவீர்கள் ?
இந்த நாட்டின் மக்கள்தான் எங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். அவர்களுடைய உரிமையை நான் எப்படி பறிக்க முடியும் ? என்னுடைய செயல்திறன் அறிக்கையை நாட்டுக்கு அளித்துவிட்டேன். சமீபத்தில், சில கணிப்புகளின் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவற்றை நீங்கள் ஏற்கெனவே பார்த்திருப்பீர்கள். நாங்கள் வலுவான அடித்தளம் அமைத்திருக்கிறோம், அதன் அடிப்படையில் மக்கள் எங்களை மதிப்பீடு செய்யலாம் என்று மட்டும் நான் கூற முடியும்
ஆம். நாங்கள் ஆற்றியுள்ள பணிகள் குறித்து எனக்கு முழு திருப்தி உள்ளது. எங்களுடைய எண்ணங்கள் தூய்மையானதாக இருக்கும் என்பது மற்றும் எங்களுடைய செயல்பாடுகள் தேசத்தின் நீண்டகால நலனைக் கருத்தில் கொண்டதாக இருக்கும் என்ற வாக்குறுதியை இந்த ஆண்டில் நிறைவேற்றி இருக்கிறோம் என்பது அதிக திருப்தி தரக் கூடிய விஷயமாகும். ஓராண்டுக்கு முந்தைய நிலைமையை திரும்பிப் பாருங்கள். அரசின் பல்வேறு நிலைகளில் அதிகமான ஊழல்களால் அடிக்கடி ஊழல்கள் பெருகி வந்தது. மதிப்புமிக்க நம்முடைய இயற்கை வளங்கள், குறிப்பிட்ட சிலரின் கைகளுக்குப் போய்க் கொண்டிருந்தன. ஊழல்தான் மிகப் பெரிய பிரச்சினையாக பார்க்கப்பட்டது. நாங்கள் தூய்மையான, வெளிப்படையான மற்றும் செயல்திறன் மிக்க அரசை அளித்திருக்கிறோம். மோசமான நாட்கள் முடிந்துவிட்டன. இது நாட்டுக்கு வளமான எதிர்காலம் அல்லவா ?
என்னுடைய அரசின் சாதனைகளும் வெற்றிகளும் எண்ணற்றவை. இருந்தாலும், கடைக்கோடி மனிதனையும் சென்றடைவதில்தான் அரசாங்க பயணத்தின் வெற்றி இருக்கிறது என்று எனக்குத் தெரியும். எனவே, எங்களுடைய முயற்சிகள் ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் உள்ளவர்களை நோக்கியதாக இருக்கின்றன. நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள பகுதிகளிலும் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். வாழ்க்கைத் தரம், கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளில் மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். சாமானிய மனிதனின் முகத்தில் புன்னகையை ஏற்ப
டுத்தக் கூடிய வகையில் அனைத்து துறைகளிலும் ஒரே சமயத்தில் நாங்கள் பணியாற்றியுள்ளோம். நான் சில உதாரணங்களைக் கூற முடியும். உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தியது முதல் வேளாண் உற்பத்தியை பெருக்கியது வரை; ரயில்வே துறையை மேம்படுத்தியது முதல் சாலை வசதிகளை வரை; 24 X 7 மின்சாரம் கிடைக்கும் வகையில் மின் உற்பத்தியை பெருக்கியது; பள்ளிக்கூடங்களில் கழிவறைகள் கட்டியது முதல் IIT-கள், IIM-கள் மற்றும் AIIMS-கள் உருவாக்கியது வரை; வீடில்லாதவர்களுக்கு வீடுகள் கட்டியது முதல் நமது பாரம்பரிய நகரங்களின் அந்தஸ்தை உயர்த்தியது வரை; சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்தியது முதல் டிஜிட்டல் பயன்பாட்டில் உள்ள இடைவெளியை நீக்கியது வரை; உலகத் தரத்திலான பொருட்களை உருவாக்கியது முதல் தொழில் திறன் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கியது வரை; வங்கியியல் நடைமுறைகளை வலுப்படுத்தியது முதல் நிதி கிடைக்காதவர்களுக்கு நிதி கிடைக்கச் செய்தது வரை; தொழிலாளர் நலனை உறுதி செய்தது முதல் சாமானிய மனிதனுக்கு சமூகப் பாதுகாப்பு அளித்தது வரை; ஆறுகளைப் புதுப்பித்தது முதல் வயல்களுக்கு பாசன வசதி கிடைக்கச் செய்தது வரை; மாநிலங்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தியது முதல் வெளிநாட்டு உறவுகளை ஆழமாக வலுவாக்கியது வரை; நாங்கள் சக்திமிக்க வேகத்துடனும் புதுமையான ஊக்கத்துடனும் செயலாற்றி இருக்கிறோம்.
கறுப்புப் பண விஷயத்தில் எனது அரசு முழு உறுதியுடன் உள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் கறுப்பு பணத்தை தீவிரமாக ஒழிக்க நாங்கள் விரும்புகிறோம். ஜி-20 மாநாட்டின் போது இந்தப் பிரச்சினை குறித்து உலகத் தலைவர்களுடன் நான் பேசினேன். எங்களுடைய முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே நாங்கள் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்தோம். பிறகு, நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை நாங்கள் உருவாக்கினோம். அது மிகவும் கடுமையான சட்டம். வரி ஏய்ப்பு செய்வது மற்றும் பணத்தை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வதை மேலும் கடினமானதாக ஆக்க நாங்கள் விரும்புகிறோம். சட்டவிரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் பணம் குவித்து வைத்துள்ளவர்களின் வழக்குகளையும் தீவிரமாக விசாரித்து வருகிறோம். சமீபத்தில், அப்படிப்பட்ட சிலருடைய பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டன. பணமாக இல்லாமல் பரிவர்த்தனைகள் செய்யும் திட்டத்தை நோக்கி நாங்கள் முயற்சிக்கிறோம். நமது வரி நிர்வாகத்தில் ICT-யின் பயன்பாட்டை அதிகபட்ச அளவுக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் விரும்புகிறோம்.
அதே சமயத்தில், ஊழல் மற்றும் கறுப்புப் பணம் உருவாக்கப்படுவதற்கான சிந்தனைகளையே நீக்க நாங்கள் விரும்புகிறோம். எனவே, நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் போன்ற துறைகளில் நாங்கள் அவசரச் சட்டங்களை அமல்படுத்தியுள்ளோம். அது நல்ல நடவடிக்கை என நிரூபணம் ஆகியுள்ளது. சில நிலக்கரி சுரங்கங்களை வெளிப்படைத்தன்மையுடன் ஏலம் விட்டதன் மூலம் இதுவரை நாட்டுக்கு நாங்கள் ரூ.3.30 லட்சம் கோடி ஈட்டித் தந்துள்ளோம். அலைக்கற்றை ஏலத்திலும் அதேபோலத்தான். உங்களுடைய எண்ணங்கள் மேன்மையானதாக, புனிதமாக இருந்தால், வெற்றியும் அதற்கான ஆதரவும் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும் என்று என்னால் கூற முடியும்.
எங்களுடைய நில மசோதாவுக்கு எதிர்ப்பு என்பது முழுக்க நியாயமற்றது; துரதிருஷ்டவசமானது. தனியார் தொழிற்சலைகளுக்கு நாங்கள் எந்த மாறுதலும் செய்யவில்லை. சொல்லப் போனால், உங்களிடம் பணம் இருந்தால், நிலம் வாங்கிக் குவிக்க உங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டமே தேவையற்றது. ராஜஸ்தான், ஹரியானா, சிம்லா, தில்லி போன்ற மாநிலங்களில் தனிப்பட்ட சிலர் அவ்வாறு செய்திருக்கிறார்கள். அரசின் முன்னெடுப்பால் முக்கியமான மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கான திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தல் தேவையாகிறது. குறிப்பாக வளர்ச்சி அடையாத பகுதிகளுக்கு இது தேவையாகிறது. அதுவும்கூட, பெரும்பாலும் மாநில அரசுகளால்தான் செய்யப்படுகிறது. மாநிலங்களின் கோரிக்கைகளின்படிதான் நாங்கள் மாற்றங்கள் செய்திருக்கிறோம். இந்த மாறுதல்களின் பலன்கள் நீர்ப் பாசனம், வீட்டு வசதி, மின்சார வசதி, நல்ல சமூக கட்டமைப்பு மற்றும் கட்டுமான வசதி என்ற வகைகளில் கிராமப்புற ஏழைகளுக்குதான் கிடைக்கும்.
இந்த நாட்டில், நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஏறத்தாழ 120 ஆண்டுகள் பழமையானது. சுதந்திரத்துக்குப் பிறகு அதே சட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் பயன்படுத்தி வந்துள்ளன. திடீரென, முந்தைய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, புதியதொரு சட்டத்தை உருவாக்கும் என்ற நடவடிக்கைக்கு காங்கிரஸ் சென்றது. அது விவசாயிகளுக்கோ அல்லது நாட்டின் வளர்ச்சிக்கோ நலன் தருவதாக இல்லை. இப்போது, அவர்கள் அமர்ந்து விவாதிப்பதற்குக் கூட தயாராக இல்லை. அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அவர்களுடைய ஆலோசனைகளைப் பரிசீலிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நாடாளுமன்றத்தில் நானே தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தேன். தேசத்துக்கு முக்கியமான விஷயங்களில், அரசியல் கணக்கீடுகளைப் பார்க்காமல் கட்சிகள் ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன்.
உத்தேசிக்கப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளுக்கு பயன் கிடைப்பதையும், தேச நலனின் நீண்டகால நலன்களை சமன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கும் கூட பாசனத்துக்கு கால்வாய்கள் தேவைப்படுகின்றன. பண்ணைகளில் இருந்து சந்தைகளுக்குப் பொருட்களை எடுத்துச் செல்ல சாலைகள் தேவைப்படுகின்றன. அவர்களுக்கு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் வீடுகள் தேவைப்படுகின்றன. தங்களுக்கு அருகையில் நவீன வசதிகள் கிடைக்க வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர். தங்களுடைய மகன்கள் மற்றும் மகள்களுக்கு முறைப்படுத்தப்பட்ட துறைகளில் வேலைகள் வேண்டும் என்று விரும்புகின்றனர். பங்கேற்புடன் கூடிய வளர்ச்சியை நாம் விரும்புவதாக இருந்தால், நமக்கு வசதிகள் தேவை என்று எப்போதும் நான் நம்புகிறேன். அதுபோன்ற வசதிகளின் மேம்பாட்டை விவசாய வளர்ச்சியுடன் சேர்த்து நாம் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் சமயத்தில், இந்த மசோதா இதை செய்வதற்குத்தான் முயற்சி செய்கிறது. 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள அதிகாரவர்க்கத்தின் நெருக்கடிகளைத் தூக்கி எறிவதைத்தான் எங்களுடைய திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. தங்களுடைய உண்மையான நலன் எங்கிருக்கிறது என்பதை இந்த நாட்டு விவசாயிகள் புரிந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
பிரச்சினைக்கான மூல காரணம் உங்களுடைய கேள்வியிலேயே உள்ளது. இது மிக முக்கியமான பிரச்சினை. அரசு இதுபற்றி அக்கறை கொண்டுள்ளது. விவசாயிகளின் சமீபத்திய நெருக்கடிகள் குறித்து முன்னார்வத்துடன் நாங்கள் செயல்பட்டிருக்கிறோம். ஏராளமான சீர்திருத்தங்கள் செய்திருக்கிறோம். பயிர் இழப்புக்கான நஷ்டஈட்டை 50% ஆக உயர்த்துவதற்கு, நிவாரண விதிமுறைகளை அரசு மேம்படுத்தியுள்ளது. நஷ்டஈடு பெறுவதற்கு பயிர் பாதிப்பு 50% இருக்க வேண்டும் என்ற வரம்பை 30% ஆகக் குறைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களை குறைந்தபட்ச ஆதார விலையில், கொள்முதல் செய்வதை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. எங்களுடைய அடுத்தடுத்த இரண்டு நிதிநிலை அறிக்கைகளில், விவசாயக் கடனுக்கான இலக்குகள் உயர்த்தப் பட்டுள்ளன.
ஆனால், நீங்கள் கூறியபடி, விவசாயப் பிரச்சினை தீராமல் உள்ளது. அறுபதாண்டு காலமாக அதிகமாக எதுவும் செய்யப்படவில்லை. எனினும் விவசாயத் துறைக்கு நீண்டகால நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். ஒவ்வொரு பண்ணைக்கும் பாசன வசதி கிடைக்க வேண்டும், தண்ணீர் செம்மையாக பயன்படுத்தப்பட வேண்டும், பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்புத் திட்டம் (PMKSY) தொடங்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி மற்றும் மீன்வளத் துறையின் உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீலப் புரட்சியும் ஒரு செயல் அம்சமாகும். மண்வள அட்டை திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். ரூ.500 கோடி தொகுப்பு நிதியுடன், அழுகும் தன்மை கொண்ட பொருட்களின் விலை கண்காணிப்பு நிதி தொடங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கால்நடை இனங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்காக நாங்கள் நேர்மையான மற்றும் உறுதியான முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தகவல்கள் மற்றும் சந்தை நிலவரங்களை தெரிவிப்பதற்காக சமீபத்தின் நான் விவசாய சேனல் ஒன்றை தொடங்கி வைத்தேன்.
வரவிருக்கும் நாட்களில், விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கு இன்னும் அதிக கவனமான நடவடிக்கைகளைக் மேற்கொள்ள விரும்புகிறேன்; ஊரக தொழில்மயமாக்கல்; கிராமங்களில் தொழில் திறன் மேம்பாடு மற்றும் கிராமப்புற வர்த்தகம் மற்றும் குளிர்பதன வசதி உள்பட ஊரக கட்டமைப்பு வசதிகளில் வேகமான முதலீடுகளைக் காண விரும்புகிறேன்.
சூட்கேஸைவிட சூட்-பூட் நிச்சயமாக அதிக ஏற்புடையதுதான். அறுபதாண்டுகள் ஆட்சி செய்த பிறகு, காங்கிரஸ் திடீரென ஏழைகளைப் பற்றி நினைக்கிறது. காங்கிரஸின் குறுகிய நோக்கம் கொண்ட கொள்கைகளால் இந்த நாட்டு மக்கள் துன்பப்பட்டனர், மற்றும் ஏழைகளாகவே இருந்தனர். வறுமை ஒழிப்பு உள்பட எல்லா விஷயங்களிலும் உலகின் பல நாடுகள் நம்மை மிஞ்சிவிட்டன. அடுத்த தேர்தலுக்குத் தேவைப்படும் வகையில் பிரச்சினைகளை வைத்திருப்பதற்கான வேலைகளை காங்கிரஸ் செய்துள்ளது. நிலக்கரி மற்றும் அலைக்கற்றை ஊழல்கள் அல்லது காமன்வெல்த் விளையாட்டு அவமானங்களால் ஏழைகளுக்குப் பயன் கிடைத்ததா ? பயன்பெற்றவர்கள் யார் என்று எல்லோரும் அறிவார்கள் – தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொழிலதிபர்களும், ஒப்பந்ததாரர்களும்தான் பயன் பெற்றார்கள். காங்கிரஸ் அரசின் அறுபதாண்டு கால அரசியலும், நிர்வாகமும், ஏழ்மையை மிகப் பெரிய சவாலாகவே நீடிக்கச் செய்துள்ளன. நான்கில் ஒரு பங்கு குடும்பத்தினருக்கு தங்குமிடம் இல்லை. நாட்டின் பெரும்பகுதி குடிமக்களுக்கு ஆரோக்கியம், கல்வி, நீர், மின்சாரம் மற்றும் சாலைகள் ஆகியவை நிறைவேறாத கனவுகளாகவே உள்ளன. அவர்களை நீங்கள் கேட்க வேண்டும் – நீங்கள் ஏழைகளுக்கு ஆதரவானவராக இருந்திருந்தால், இந்தியாவில் ஏன் இன்னும் ஏழ்மை இருக்கிறது ?”
நிலக்கரி மற்றும் அலைக்கற்றை போன்ற மதிப்புமிக்க இயற்கை வளங்களை தங்களுக்குப் பிடித்தமான தொழிலதிபர்களுக்கு கொடுத்துவிட்டவர்களுக்கு இதை கூறக் கூடிய உரிமை இல்லை. நாங்கள் நாட்டின் சாமானிய மனிதனுக்காக உழைக்கிறோம்.
எங்கள் அரசின் தொடக்க மாதங்களிலேயே, அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கும் பணியை நாங்கள் மேற்கொண்டோம். இந்த அரசுப் பள்ளிகளில் ஏழைகளின் குழந்தைகள் படிக்கவில்லையா ?
ஜன் தன் திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி, நிதித் துறையில் பங்கேற்புக்காக 14 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைத் தொடங்கினோம். முன்பும் கூட, வங்கிகள் இருந்தன. மக்கள் வங்கிக் கணக்குகள் இல்லாமல் இருந்தார்கள். இவ்வளவு ஆண்டுகளாக அவர்கள் என்ன செய்தார்கள் ?
ஏழைகளின் ஆதரவாளர் என சொல்லிக் கொண்டவர்கள் மானியங்கள் திசை திருப்பப்படும் வகையிலான செயல்களை திரும்பத் திரும்பச் செய்தனர். எல்.பி.ஜி. மானியம் பயனாளிகளுக்கு நேரடியாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்கு, தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தினோம்;
6 கோடி சிறு வியாபாரிகள் மற்றும் வணிகர்களுக்கு நிதி உதவி செய்வதற்காக முத்ரா வங்கியை நாங்கள் தொடங்கினோம். அவர்களில் 61% பேர் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்கள்;
நாங்கள் பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கினோம், காங்கிரஸ் அறுபதாண்டுகளில் இதுபற்றி சிந்தித்ததுகூட கிடையாது;
2022 ஆம் ஆண்டுக்குள், வீடு இல்லாத குடும்பம் எதுவும் இருக்கக் கூடாது என்ற நிலையைக் காணும் வகையில் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்;
விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானம் பெருகவும் வழி செய்யும் மண்வள ஆரோக்கிய அட்டை திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்;
ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்காக விரிவான சமூக பாதுகாப்புத் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்;
ஏழைகளின் பணித் திறனைப் பாதித்து, ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் உழைப்பு பாதிக்கப்படாத வகையில், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளைக் கவனிக்க தூய்மையான பாரதம் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்;
சாமானிய மனிதன் பயணிக்கும் இந்திய ரயில்வே நல்ல வகையில் மாற்றப்பட்டுள்ளது.
இளைஞர்கள் வேலை பெறக்கூடிய நிலையை மேம்படுத்தும் வகையில் தொழில்திறன் மேம்பாட்டு அமைச்சகத்தை அமைத்துள்ளோம். “மேக் இன் இந்தியா” போன்ற முயற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைகள் வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கடந்த காலத்தில், வேலையற்றவர்கள் வளர்ச்சியிலான ஒரு பொருளாதாரத்துக்கு நாடு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசங்களில் காவல் துறையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்துள்ளோம். தேர்தல் எதுவும் நெருங்காத சூழ்நிலையிலும் இது செய்யப் பட்டுள்ளது.
நாங்கள் அமல்படுத்திய நிலக்கரி ஏல நடைமுறையில், இந்தியாவில் குறைவான வளர்ச்சி கண்ட மாநிலங்களுக்கு ஏற்கெனவே ரூ.3 லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் உருவாக்கப் பட்டுள்ளது. அந்த மாநிலங்களின் ஏழைகளுக்காக இந்தப் பணம் பயன்படுத்தப்படும்.
இவையெல்லாம் சில உதாரணங்கள்தான். கடந்த அறுபதாண்டுகளில் இவையெல்லாம் ஏன் செய்யப்படவில்லை? அவர்களை யார் தடுத்தார்கள்? நாங்கள் ஏழைகளுக்கு ஆதரவாக இல்லை என்பது அவர்களுடைய கவலை அல்ல. அவர்கள் ஏழைகளுக்கு ஆதரவானவர்களாக இருந்திருக்கவில்லை என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறோம் என்பதுதான் அவர்களுடைய கவலை. மக்கள் அவர்களைக் கேட்கிறார்கள் : “ஆறு முதல் ஒன்பது மாதங்களில் மோடியின் அரசாங்கத்தால் இதை சிந்தித்து, செயல்படுத்த முடிகிறது என்றால், அறுபதாண்டுகளில் உங்களால் ஏன் செய்ய முடியாமல் போனது?”
வெளிநாட்டு பயணங்கள் என்பவை பிரதமரின் சர்வதேச கடமைகள். எல்லா பிரதமர்களும் இதைச் செய்ய வேண்டும். சொல்லப்போனால் இது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட உலகம். நாம் சர்வதேச, பன்முகப்பட்ட மற்றும் இருதரப்பு மாநாடுகளில் கலந்து கொண்டாக வேண்டும். நமது அண்டை நாடுகள் மற்றும் பிற நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்த வேண்டும். நமது வெளிநாட்டுக் கொள்கை என்பது முதிர்ச்சியானது. அதைக் கையாள்வதற்கு முழுமையான செயல்முறைகள் உள்ளன. செயலாற்றல் என்ற அம்சத்தை மட்டுமே நான் அதில் சேர்த்திருக்கிறேன். ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் நம்முடைய பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு நாங்கள் கடுமையாக முயற்சி மேற்கொண்டுள்ளோம். புதிய பொருளாதார பங்களிப்புகளை உருவாக்கவும், பெரிய பொருளாதார நாடுகளிடம் இருந்து எரிசக்தி, கனிமவளம், தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆகிய வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்.
ஆம், ஒப்பந்தங்களும், உறுதிமொழிகளும் அமல்படுத்தப்படும் என நிச்சயமாக நம்புகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3.5 டிரில்லியன் யென் – அல்லது சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் – அளவுக்கு பொது மற்றும் தனியார் துறையில் நிதியுதவி அளிக்க ஜப்பான் அரசிடம் இருந்து உறுதிமொழியை நாம் பெற்றிருக்கிறோம்; இரண்டு தொழில் பூங்காக்கள் அமைப்பது மற்றும் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டுக்கு சீனாவுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன; அடுத்த ஐந்தாண்டுகளில் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து 42 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. இந்தியாவில் ஹெலிகாப்டர்கள் தயாரிக்க ரஷியா உத்தேசித்துள்ளது. நமது எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவுடன் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மற்றும் வேறு ஒப்பந்தங்களில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். சிவில் அணுசக்தி ஒப்பந்தம் அமல் செய்வதில் அமெரிக்காவுடன் நாங்கள் முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளோம். கிராமப் பகுதிகளுக்கு எரிசக்தி வசதி கிடைப்பதை வேகமாக விரிவாக்கம் செய்வதற்காக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முக்கியத்துவமான பங்களிப்பு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம். நிதி அமைப்புகளிடம் இருந்து இதற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. கொரியா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற ஓய்வு நிதியங்களும் இதில் அடங்கும். நம்முடைய “மேக் இன் இந்தியா” திட்டத்துக்கு அனைத்து பெரிய பொருளாதார நாடுகளிலும் பலமான ஆதரவு கிடைத்துள்ளது.
அருகில் உள்ள, நேபாளத்தில் 5600 மெகாவாட் பஞ்சேஸ்வர் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளாக தடைபட்டிருந்த திட்டம். அதேபோல, வங்கதேசத்துடன் நில எல்லை பிரச்சினையை நாம் தீர்த்துள்ளோம். பரஸ்பர நலன் என்ற எண்ணத்துடன் நாங்கள் பணியாற்றுகிறோம். யாரையும் அடக்கியாள்வது என்ற கேள்வியே கிடையாது. சமீபத்தில் இயற்கைப் பேரழிவின் போது நேபாளத்துக்கு நாம் அளித்த உதவி, சகோதரத்துவ அணுகுமுறையை நாம் கையாள்கிறோம் என்பதைக் காட்டியுள்ளது. பாகிஸ்தானுடனும் கூட, நீண்டகால நோக்கிலான அணுகுமுறையை நாங்கள் கையாள்வோம். நமது நாட்டின் பாதுகாப்பை விட்டுத் தந்துவிடாமல் ஒத்துழைப்பு மற்றும் இணைப்பு நிலைகளை மேம்படுத்துவதற்கான நமது முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.
நமது அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்குமான மத சுதந்திரத்தை உத்தரவாதம் செய்கிறது. அதில் விட்டுத்தருதல் கிடையாது. எல்லா நம்பிக்கைகளையும் வரவேற்பது, மதிப்பது, கவுரவிப்பது ஆகியவை இந்தியாவைப் போன்றே பழமையானது. சுவாமி விவேகானந்தர் கூறியது போல: உலகளாவிய சகிப்புத்தன்மையில் மட்டும் நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால், எல்லா மதங்களுமே உண்மையானவை என நாம் ஏற்றுக் கொள்கிறோம். எல்லா நம்பிக்கைகளுக்கும் சமமான மரியாதை அளித்தல், சமமாக நடத்துதல் என்ற கொள்கை இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள தனிப்பண்பு ஆகும். அப்படித்தான் இந்திய அரசியல்சாசனத்தின் அங்கமாக அது அமைந்தது. நமது அரசியல்சாசனம் வெற்றிடத்தில் இருந்து உருவாக்கப்படவில்லை. தொன்மையான இந்திய கலாசார பாரம்பரியங்களில் அது வேர் கொண்டுள்ளது. எல்லோரும் இதைப் புரிந்து, மதிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
நான் இதை முன்பும் கூறியுள்ளேன், இப்போது மீண்டும் கூறுகிறேன்;எந்தவொரு சமுதாயத்துக்கும் எதிரான பாரபட்சபோக்கு அல்லது வன்முறையைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் எனது நிலைப்பாடு மிகவும் தெளிவானது; சப் கே சாத் சப் கா விகாஸ். சாதி அல்லது மதத்தைப் பற்றிய வரம்பு இல்லாமல் 1.25 பில்லியன் இந்தியர்கள் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் இருக்கிறோம். அவர்களில் ஒவ்வொருவருடைய முன்னேற்றத்துக்காகவும் நாங்கள் பணியாற்றுவோம். நமது நாட்டில் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் சம உரிமைகள் உண்டு; சட்டத்தின் முன்பு சமம் என்பது மட்டுமல்ல. சமூகத்தின் முன்பும் கூடத்தான்.