Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையின் சிறப்பம்சங்கள் வருமாறு:


  • இன்று நமது நாட்டில் தன்னம்பிக்கை முழுமையான அளவில் உள்ளது. புதிய உயரங்களை எட்டும் உறுதியுடன் தீவிர கடின உழைப்புடன் நாடு புதிய உயரங்களை எட்டி வருகிறது.
  • உத்தராகண்ட், இமாச்சல், மணிப்பூர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த நம் மகள்கள் ஏழு கடல்களை சுற்றி வந்துள்ள நிலையில் இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஏழு கடல்களின் நிறத்தை நமது மூவர்ணத்திற்கு மாற்றி (ஏழு கடல்களிலும் மூவர்ணக்கொடியை ஏற்றி) நம்மிடையே திரும்பி வந்துள்ளனர்.
  • நமது வனப்பகுதிகளில் கடைக்கோடி பகுதிகளில் வாழும் பழங்குடி இன குழந்தைகள் நமது மூவர்ண கொடியை இமயமலை சிகரத்தில் ஏற்றியதன் மூலம் அதன் புகழை விரிவுபடுத்தி உள்ளனர்.
  • தலித் அல்லது வஞ்சிக்கப்பட்ட அல்லது சுரண்டப்பட்ட யாரேனும் அல்லது இழப்பை சந்தித்த நபர் அல்லது மகளிர் என யாராக இருந்தாலும் அவர்களுக்காக நமது நாடாளுமன்றம் அவர்களது விருப்பங்களைப் பாதுகாக்கும் உணர்வு மற்றும் விழிப்புணர்வுடன் சமூக நீதியை கூடுதல் வலிமையாக்கியுள்ளது.
  • இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்க வேண்டும் என கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் முயற்சியை நமது நாடாளுமன்றம் மேற்கொண்டுள்ளது.
  • வெள்ளம் காரணமாக தங்களது அன்புக்குரியவர்களை இழந்ததுடன் ஏராளமான துயரங்களை சந்தித்த மக்களுடன் இந்த நாடு இருக்கிறது என்பதையும் அவர்களுக்கு உதவும் வகையில் முழுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் மறு உறுதிசெய்ய விரும்புகிறேன். தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இதயபூர்வமான் இரங்கல்கள்.
  • அடுத்த ஆண்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையின் 100 ஆண்டை குறிப்பதாகும். நாட்டின் விடுதலைக்காக ஏராளமானோர் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர் ஜாலியன்வாலாபாக் சம்பவத்தில் அந்த துடிப்பான இதயங்கள் செய்த தியாகங்கள் நமக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. அந்த துடிப்புமிக்க இதயங்களை எனது இதயத்தில் ஆழத்தில் இருந்து வணக்குகிறேன். சுரண்டல்கள் அனைத்து வரம்புகளையும் கடந்து விட்டது.
  • உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • எனது நாட்டு மக்களின் சார்பில் துடிப்புமிக்க சுதந்திர போராட்ட வீரர்களை எனது இதயத்தின் மையத்தில் இருந்து வணங்குகிறேன். தேசியக் கொடியான மூவர்ணக் கொடியின் பெருமையையும் கண்ணியத்தையும் பராமரிக்கவும், மக்களுக்கு சேவை அளிக்கவும் நாள்தோறும் நமது ராணுவ, துணை ராணுவ மற்றும் காவல்துறை வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து வருகின்றனர்.
  • சுதந்திரத்திற்கு பின்னர் அனைத்தையும் உள்ளடக்கிய அரசியல் சாசனம் பாபா சாஹேப் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டது. புதிய இந்தியாவை உருவாக்கும் உறுதியுடன் அது வந்துள்ளது.
  • தன்னிறைவு பெற்றதாக, வலிமையாக, நீடித்த வளர்ச்சிக்கான பாதையில் இந்தியா இருக்க வேண்டும். இந்தியாவின் மீதான நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது, உலகில் இந்தியா சிறந்த நாடாக இருப்பதுடன், அவ்வாறு இந்தியாவை நாம் ஆக்க வேண்டும்.
  • 125 கோடி மக்களின் கனவுகள், கடின உழைப்பு மற்றும் விருப்பங்கள் ஒன்றாக வரும்போது, சாதிக்க முடியாதது எது?
  • 125 கோடி இந்தியர்கள் 2014ம் ஆண்டு அரசை அமைத்ததுடன் மட்டும் நிற்காமல், இந்த நாட்டை சிறப்பானதாக ஆக்க அவர்கள் பாடுபட்டனர்.இதுதான் இந்தியாவின் வலிமை.
  • கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யப்பட்ட பணிகளை நீங்கள் கவனத்தில் கொண்டால், நாட்டின் முன்னேற்றத்தில் காணப்படும் வேகம் கண்டு நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.
  • 2013ம் ஆண்டு வேகத்தில் நாம் செயல்பட்டிருந்தால், இந்தியாவை 100 சதவீதம் திறந்தவெளிக் கழிப்பிடம் அற்றதாகவும், ஒவ்வொரு பகுதியை மின்மயமாக்குவதும் அல்லது ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அனைத்து மகளிருக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு அளிப்பதற்கும் நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். 2013ம் ஆண்டில் இருந்த வேகத்தில் நாம் செயல்பட்டிருந்தால் நாடு முழுவதும் கண்ணாடி இழை கேபிள் பதிக்க ஒட்டுமொத்தமாக ஒரு தலைமுறை தேவைப்பட்டிருக்கும். இந்த இலக்குகள் அனைத்தையும் எட்டுவதற்கு வேகத்தில் நாம் செல்வோம்.
  • கடந்த நான்காண்டுகளில் நாடு ஒரு மாற்றத்தை அனுபவித்து வருகிறது. புதிய ஆர்வம், உற்சாகம் மற்றும் தைரியத்துடன் நாடு முன்னேறி வருகிறது. இன்றைய தினம் நமது நாட்டில் நெடுஞ்சாலகள் இரண்டு மடங்கு கூடுதலாகவும் கிராமங்களில் நான்கு மடங்கு கூடுதல் வீடுகளும் கட்டப்பட்டு வருகிறது.
  • இந்த நாடு சாதனை அளவு உணவு தானியங்களை உற்பத்தி செய்வதுடன் சாதனை அளவு மொபைல் ஃபோன்களை தயாரித்து வருகிறது. டிராக்டர்கள் விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
  • சுதந்திரத்திற்கு பின்னர் நாடு அதிக எண்ணிக்கையிலான விமானங்களை வாங்குகிறது.
  • நாட்டில் புதிய ஐ.ஐ.எம்.கள், ஐ.ஐ.டி.க்கள் மற்றும் எய்ம்ஸ்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
  • சிறு இடங்களிலும் புதிய மையங்களை உருவாக்குவதன் மூலம் திறன் மேம்பாடு இயக்கத்திற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.
  • 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களிலும் புதிய தொழில்கள் பெருமளவு தொடங்கப்பட்டுள்ளது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான ‘பொதுவான குறியீடு’களைக் கொண்ட அகராதியைத் தொகுக்கும் பணியை விரைவுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • வேளாண் துறையில் நவீனமயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமது விவசாயிகள் நுண்ணீர் பாசனம், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
  • நமது ராணுவ வீரர்கள் பேரழிவில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அனுதாபத்துடனும் இரக்க உணர்வுடனும் உதவி செய்யும் வேளையில், மறுபுறம், எதிரிகளைக் குறி வைத்து துல்லியமான தாக்குதல் நடத்தும் வல்லமையும் பெற்றுள்ளனர்.
  • புதிய குறிக்கோளுடன் செயல்பட்டு நாம் வளர்ச்சி அடைவோம். நமது நோக்கம் தெளிவாக இல்லாவிட்டால், வளர்ச்சி அடைய முடியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முடியாது.
  • விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்கச் செய்ய உறுதிபூண்டுள்ளோம். பல்வேறு பயிர்களுக்கு, அவற்றின் இடுபொருள் செலவை விட 1.5 மடங்கு அளவிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • சிறு வணிகர்கள் உதவியுடன், அவர்களது வெளிப்படைத் தன்மை மற்றும் புதுமைகளை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் காரணமாகவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாட்டில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது வணிகர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
  • பினாமி சொத்து ஒழிப்புச் சட்டம் மிகுந்த துணிச்சலுடனும் நாட்டின் நலன் கருதியும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
  • ஒரு காலத்தில் இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதாக உலக நாடுகள் கூறி வந்தன. ஆனால் தற்போது, அதே அமைப்புகளும், அதே நபர்களும், நாம் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் நமது கட்டமைப்புக்களை பலப்படுத்தியுள்ளதாக மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
  • இந்தியாவில் தொழில் தொடங்குவது கடினமான காரியம் என்று கூறி வந்த காலமும் மாறி விட்டது. தற்போது நாம் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களைப் பற்றியே விவாதிக்கின்றனர். தொழில் தொடங்குவதை எளிமையாக்குவதில் இந்தியா 3-ஆவது இடத்தை எட்டியுள்ளது. நமது சாதனைகளைக் கண்டு உலகம் மிகுந்த பெருமிதத்துடன் பார்க்கிறது.
  • ஒரு காலத்தில் இந்தியா என்றாலே, குளறுபடியான கொள்கைகள் மற்றும் தாமதமாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நாடு என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவின் “சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம்” என்பதைப் பற்றித்தான்  பேசப்படுகிறது.
  • முன்பு, பலவீனமான ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உலகம் கருதி வந்தது. ஆனால் தற்போது, பல்லாயிரம் கோடி டாலர் முதலீட்டுக்கு உகந்த இடம் இந்தியா என உலக நாடுகள் கூறுகின்றன.
  • இந்திய பொருளாதாரத்தைக் குறிப்பிடும்போது, “தூங்கிக்கொண்டிருந்த யானை” விழித்துக்கொண்டு பந்தயத்தில் ஓடத் தொடங்கி விட்டதாக கூறுகின்றனர். அடுத்த 30 ஆண்டுகளுக்கு உலகப் பொருளாதார வலிமைக்கு இந்தியா உத்வேகம் அளிக்கும் என்று உலகப் பொருளாதார நிபுணர்களும், அமைப்புகளும் கூறுகின்றன.
  • சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் கவுரவமும் உயர்ந்துள்ளது. அது போன்ற அமைப்புகளில்  இந்தியா தனது கருத்துக்களை வலிமையாக எடுத்துரைத்து வருகிறது.
  • சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராவதற்காக இந்தியா முன்பு காத்துக் கிடந்தது. ஆனால் தற்போது, ஏராளமான அமைப்புகள் தாமாக முன்வந்து இந்தியாவை உறுப்பினராக்கிக் கொள்ள விரும்புகின்றன. புவி வெப்பமயமாதல் பிரச்சினையில், உலகின் மற்ற நாடுகளுக்கு இந்தியா ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளது. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது.
  • விளையாட்டுத் துறையில் வடகிழக்கு மாநிலங்கள் மீது பெரும் நம்பிக்கை  ஏற்பட்டு இருப்பதை காண முடிகிறது.
  • வடகிழக்கு மாநிலத்தில் உள்ள கடைசி கிராமும் மின் இணைப்புப் பெற்றுள்ளது.
  • நெடுஞ்சாலை, ரயில்வே, விமானப் போக்குவரத்து, நீர் வழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளிலும்  வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்றம் அடைவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
  • வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், அவர்களது பகுதியில், வெளிப் பணி  மையங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
  • வடகிழக்கு மண்டலம், இயற்கை வேளாண் பகுதியாக மாறி வருகிறது. வடகிழக்கு மாநிலத்தில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது.
  • ஒரு காலத்தில்  தில்லி வெகு தொலைவில் இருப்பதாக வடகிழக்கு மாநிலங்கள் கருதி வந்தன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில், தில்லி வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆதரவாக உள்ளது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம்.
  • நம் நாட்டின் மக்கள் தொகையில் 65% பேர் 35 வயது இளைஞர்களாக உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு தன்மையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். புதிய தொழில் தொடங்குவது, வெளிப் பணி மையங்கள்  அல்லது மின்னணு வர்த்தகம் அல்லது போக்குவரத்து போன்ற துறைகளில் நமது இளைஞர்கள் புதிய பிரிவுகளுக்குள் நுழைந்துள்ளனர். தற்போது, நாட்டை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்ல நமது இளைஞர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
  • முத்ரா கடன் உதவியை 13 கோடி பேர் பெற்றிருப்பது மாபெரும் சாதனையாகும். இவர்களில் 4 கோடி இளைஞர்கள் முதன்முறையாக கடன் உதவி பெற்று சுய வேலைவாய்ப்பு பெற்றிருப்பதுடன் சுயமாக முன்னேற்றம் அடைந்துள்ளனர். சூழ்நிலை மாறிவருவதற்கு இதுவே சிறந்த உதாரணம் ஆகும். நமது இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 3 லட்சம் கிராமங்களில் பொது சேவை மையங்களை நிர்வகிப்பதுடன், அனைத்து கிராமங்கள் மற்றும் மக்களுக்கு உலகின் பிற பகுதிகளுடன் சில விநாடிகளிலேயே இணைப்பை ஏற்படுத்துகின்றனர்.
  • புதுமைகளைக் கண்டுபிடிக்கும் உத்வேகத்துடன் உள்ள நமது விஞ்ஞானிகளின் முயற்சியால், மீனவர்கள் மற்றும் இதர தரப்பினருக்கு பயனளிக்கக் கூடிய “நேவிக்” என்ற செயற்கைக் கோளை செலுத்தவிருக்கிறோம்.
  • 2022ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களுடன் கூடிய விண்கலத்தைச் செலுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த சாதனையைப் புரியும் 4ஆவது நாடாக இந்தியா திகழும்.
  • தற்போது நாம் வேளாண் துறையை  நவீனமயமாக்குவதில்  கவனம் செலுத்தி வருகிறோம். 75ஆவது  சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க தீர்மானித்துள்ளோம்.
  • நவீனமயமாக்கல் மூலம் வேளாண் துறையில் பங்களிப்பை அதிகரிக்க விரும்புகிறோம். “விதை வழங்குவது முதல் சந்தைப்படுத்துதல் வரை” மதிப்புக்கூட்டு நடைமுறையை பின்பற்றவும் விரும்புகிறோம். முதன்முறையாக, வேளாண் ஏற்றுமதி கொள்கைப் பாதையில் முன்னேற்றம் கண்டிருப்பதன் மூலம், உலக சந்தையில் நமது விவசாயிகள் வலுவான சக்தியாக திகழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இயற்கை வேளாண்மை, நீலப் புரட்சி, இனிப்பு புரட்சி எனப்படும் தேனீ வளர்ப்பு, சூரிய சக்தி வேளாண்மை போன்ற புதிய துறைகளில், மேலும் முன்னோக்கிச் செல்ல முடிவு செய்திருக்கிறோம்.
  • மீன் வளத்தைப் பொறுத்தவரை, இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
  • தேன் ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
  • எத்தனால் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்திருப்பது கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கிராமப்புற பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மற்ற துறைகளும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. கிராமப்புறங்களுக்கான ஆதாரங்களை அதிகரிப்பதுடன், மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்கி, பல நூறு கோடி ரூபாய் கிடைக்கச் செய்துள்ளோம். கிராமங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
  • கதர் துணி விற்பனையும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
  • தற்போது நமது விவசாயிகள் சூரிய சக்தி விவசாயத்தில் கவனம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் வேளாண்துறைக்கு உரிய பங்களிப்பை வழங்குவதுடன் சூரிய மின் சக்தியை விற்பனை செய்வதன் மூலம் வருவாய்  ஈட்டவும் வகை செய்யப்பட்டுள்ளது.
  • பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியுடன், மனித வாழ்க்கை கண்ணியமானதாக அமைய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம். எனவே, இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம், சாதாரண குடிமகனும் தனது வாழ்க்கையை பெருமிதம் கொண்டதாகவும், மரியாதை மற்றும் கண்ணியமான முறையிலும் மேற்கொள்ள முடியும்.
  • உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, தூய்மை இயக்கம் மூலம், 3 லட்சம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
  • காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாகிரகம் அளித்துள்ள உத்வேகத்தின் அடிப்படையில், தூய்மைப் பணியாளர்களை ஒன்று திரட்டுவதில் நாம் வெற்றியடைந்துள்ளோம். தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம், காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளின்போது, கோடிக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் அவருக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
  • பரம ஏழைகளுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, மத்திய அரசு பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தற்போது இந்தத் திட்டத்தின் மூலம், எந்த ஒரு நபரும்  நல்ல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சைப் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பத்துக்கோடி குடும்பங்கள் சுகாதார காப்பீட்டு பலன்களை பெற முடியும். அதாவது, 50 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையவுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை சுகாதார காப்பீடு கிடைக்கும்.
  • தொழில்நுட்பம் மற்றும் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். சாமானிய மக்கள் பல்வேறு வசதிகளைப் பெறுவதில் உள்ள இடையூறுகளை அகற்ற, தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, புதிய தொழில்நுட்ப சாதனங்கள் உருவாக்கப்படுகின்றன.
  • பிரதமரின் ஜன் ஆரோக்ய அபியான் திட்டம் 2018 செப்டம்பர் 25 அன்று தொடங்கப்படுவதன் மூலம், இப்போதிலிருந்தே சாமானிய குடிமகனும் கொடிய நோய்கள் காரணமாக அவதிப்படுவது தவிர்க்க்ப்படும்.
  • நடுத்தர குடும்பத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு சுகாதாரத்துறையில் புதிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது. 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களிலும் புதிய மருத்துவமனைகள் கட்டப்படும். மருத்துவ பணியாளர்கள் அதிக அளவில் நியமிக்கப்படுவார்கள். வரும் ஆண்டுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
  • கடந்த நான்காண்டுகளில் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐந்து கோடி ஏழை மக்கள் வறுமைக் கோட்டை தாண்டி விட்டதாக சர்வதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால், இடைத்தரகர்கள் அந்த பலன்களை பறித்துச் செல்வதால், ஏழைகளால் அந்த பலன்களை அடையாத முடியாத நிலை உள்ளது.
  • ஊழலுக்கான அனைத்து வாய்ப்புகளையும் அடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. லஞ்ச ஊழலையும், கருப்புப் பணத்தையும் முற்றிலுமாக அகற்றும் முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம் இந்தமுயற்சிகள் காரணமாக அரசின் கருவூலத்திற்கு 90,000 கோடி ரூபாய் திரட்ட முடிந்தது.

 

  • நாணயமானவர்கள் முறைப்படி வரியை செலுத்தி விடுகிறார்கள். அவர்களின் பங்களிப்பால் கிடைக்கும் வருவாய் மூலம், திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த பெருமை வரிசெலுத்துவோரை சாருமே அன்றி அரசுக்கல்ல.

 

  • 2013-ம் ஆண்டுவரைகடந்த 70 ஆண்டுகளாக நேர்முகவரி செலுத்துவோர் எண்ணிக்கை நான்கு கோடியாக இருந்தது. இப்போது 7.25 கோடியாக அதிகரித்துள்ளது.

 

  • கடந்த 70ஆண்டுகளில் மறைமுகவரி அதிகாரிகள் 70 லட்சம் கணக்குகளில் வருவாய் திரட்டினார்கள். ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டபின் முதல் ஓராண்டு காலத்திலேயே 16 லட்சம்கணக்குகள்மூலம்வருவாய்ஈட்டமுடிந்திருக்கிறது.

 

  • கருப்புப்பணத்தையும், ஊழலையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்போது பல தடைகள் ஏற்படலாம். அதற்காக அந்தத் தீமைகளை அனுமதிக்க மாட்டேன். இப்போது தலைநகர் தில்லியில்அதிகாரஇடைத்தரகர்கள்காணாமல்போய்விட்டார்கள்.

 

  • ஒளிவுமறைவற்ற தன்மையை நிலைநாட்ட ஆன்லைன் முறையை அறிமுகம் செய்துள்ளோம் இதற்காக தகவல் தொழில் நுட்பத்தை அதிகபட்சமாக பயன்படுத்துகிறோம்.

 

  • குறுகிய கால சர்வீஸ் கமிஷன் மூலம் ராணுவத்தில் பெண் அதிகாரிகளை நாங்கள் நியமிக்க உள்ளோம். இந்தத் தேர்வில் எந்த ஒளிவுமறைவும் இருக்காது. பெண்அதிகாரிகள், ஆண் அதிகாரிகளுக்கு சமமாக நடத்தப்படுவார்கள்.

 

 

  • பாலினவன்கொடுமைவேதனைக்குரியது.அந்தகொடுமைக்கு உள்ளாகிறவர் அனுபவிக்கும்துன்பம்அதைவிடகொடுமையானது. இதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இந்த வேதனையின் தன்மையை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

 

  • இந்த நாட்டையும் சமுதாயத்தையும் அரக்கத்தனமான போக்கின் பிடியிலிருந்து விடுவித்தாக வேண்டும். சட்டம் தன் கடமையை செய்து கொண்டே இருந்தாலும், இந்தப் போக்கை முறியடிக்க நாமும் பாடுபடுவதுடன், இது போன்ற வக்கிரங்களை நாம் அடக்கியாக வேண்டும்.

 

  • முத்தலாக் முறை முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் ஆபத்தை உருவாக்குகிறது. தலாக் பெறாதவர்களும் அதே சூழ்நிலையைத்தான் சந்திக்கிறார்கள். முஸ்லிம் பெண்களின் இந்த துயரத்தை போக்குவதற்காகத்தான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஒரு சட்டத்தை கொண்டுவர முனைந்தோம். இப்போதுகூட இந்த மசோதா நிறைவேறக் கூடாது என்று கருதுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

  • பாதுகாப்புப்படைகளும், மாநில அரசுகளும் மேற்கொண்ட முயற்சிகள், மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வளர்ச்சித் திட்டங்கள், மக்களின் ஈடுபாடு ஆகியவை காரணமாக திரிபுராவும், மேகாலயாவும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

 

  • ஜம்மு- காஷ்மீரை பொறுத்தவரை அடல்பிஹாரிவாஜ்பாய் காட்டிய வழிதான் சாலச்சிறந்தது.  அதே பாதையில் நாமும் பயணிக்க விரும்புகிறோம்.  துப்பாக்கிக்குண்டுகள் மூலமாக அல்ல, காஷ்மீரின் தேசபக்தமக்களுடன் நேச உணர்வு கொண்டு இதில் நடைபோட விரும்புகிறோம்.

 

  • வரவிருக்கும் மாதங்களில் ஜம்முகாஷ்மீரின் ஊரகப்பகுதி மக்கள் தங்கள்உரிமையைஅனுபவிக்கஉள்ளார்கள். தங்களைத் தாங்களே பேணிக்கொள்ளும் நிலையை எய்துவார்கள். வளர்ச்சிக்குத்தேவைப்படும்போதுமானநிதியை, இந்திய அரசு அங்குள்ள ஊராட்சிமன்றங்களுக்குவழங்குகிறது.  அங்கு ஊராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தநாம் வழிவகுக்க வேண்டும். அதில்நாம்முன்னேறிவருகிறோம்.

 

  • ஒவ்வொரு இந்தியனின் கனவும் ஒரு சொந்த வீடு வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அனைவருக்கும் வீடு திட்டத்தை அறிவித்திருக்கிறோம்.வீடுவேண்டும்என்றுவிரும்புவோர்அந்த வீட்டில்மின்இணைப்புவேண்டும்என்றும்விழைகிறார்கள். அதனால் கிராமம் தோறும் மின்மயமாக்கல் திட்டத்தை தொடங்கியுள்ளோம். சமையல்அறையில், புகைமூட்டத்தை யாரும் விரும்புவதில்லை. அதற்காகத்தான் அனைவருக்கும் சமையல்எரிவாயுதிட்டத்தைதொடங்கியுள்ளோம்.  பாதுகாக்கப் பட்ட குடிநீர் வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் விருப்பம். அனைவரும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறச் செய்வதே நமது விருப்பம். கழிப்பறை வேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பம். அதனை நிறைவேற்றி வைக்கும் நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளோம்.  ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் திறன் வளர்ப்பு நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் அனைவருக்கும் உரிய திறன் கிடைக்கும். தரமான சுகாதாரச் சேவை வேண்டும் என்பதும்ஒவ்வொருஇந்தியரின்ஏக்கம். அதைப்பூர்த்தி செய்வதற்காக அனைவருக்கும் ஆரோக்கியம் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்தியர்கள் விரும்பும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காப்பீடு திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இணையதள சேவை என்பது இன்று ஒவ்வொருவரின் ஏக்கமாகஉள்ளது. அதற்காகத்தான் அனைவரும் இணையதள இணைப்பை பெறும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இணைப்பு என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்த விரும்புகிறோம்.

 

  • நமதுபாதையில் நாம் மோதலை விரும்பவில்லை, தடைகளையும் விரும்பவில்லை, யாருக்கும் தலைவணங்கி செல்லவும் நாம் விரும்பவில்லை. நாடு ஒரு போதும் தனது பீடுநடையை நிறுத்திக் கொள்ளாது. யாருக்கும் தலைவணங்காது. களைப்பையும் சந்திக்காது. நாம் புதிய உச்சத்தை தொட்டாக வேண்டும். வரும் ஆண்டுகளில் அளப்பரிய முன்னேற்றத்தை சாதிப்பதே நமதுலட்சியம்.

 

*******