Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

70வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களை துவக்கி வைக்கும் வகையில் பிரதமர் மூவர்ணக் கொடி யாத்திரையைத் தொடங்கி வைத்தார்

70வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களை துவக்கி வைக்கும் வகையில் பிரதமர் மூவர்ணக் கொடி யாத்திரையைத் தொடங்கி வைத்தார்


பிரதமர் திரு. நரேந்திரமோடி இன்று சுதந்திரப் போராட்ட வீர்ர் சந்திரசேகர் ஆசாத்துக்கு அவரது பிறந்த இடமான மத்தியப்பிரதேசம் அலிராஜ்பூர் மாவட்டம் பாப்ரா என்ற இடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஷாகித் சந்திரசேகர் ஆசாத் திருவுருவச்சிலைக்கு பிரதமர் மாலை அணிவித்தார். அவரது பிறந்த இடத்தில் அமைந்துள்ள நினைவிடத்தையும் பிரதமர் சென்று பார்த்தார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் இதே நாளில் தான் மகாத்மா காந்தி பிரிட்டிஷாருக்கு வெள்ளையனே வெளியேறு அறைகூவலை விடுத்தார் என்பதை நினைவு கூர்ந்தார். நாமனைவரும் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் வகையில் நாட்டின் சுதந்திரத்திற்கு தமது இன்னுயிரையும் ஈந்த தியாகிகளை நினைவு கூற வேண்டும் என்று மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

சந்திரசேகர் ஆசாத் பிறந்த இடத்திற்கு வந்திருப்பது தமக்குப் பெருமை அளிப்பதாக பிரதமர் கூறினார். அவரைப் போன்றவர்கள் நாட்டிற்காக உழைக்க வேண்டுமென நமக்கு உத்வேகம் அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டிற்காக உயிரைக் கொடுக்க வாய்ப்புக் கிடைக்காத நாமெல்லாம் இந்த சந்தர்ப்பத்தை நாட்டிற்காக வாழப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். நாடு அதன் மக்களது பலம், உள்ளக்கிடக்கைகள், கடுமையான உழைப்பு ஆகியவற்றினால் தான் முன்னேறுகிறது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு இந்தியனும் காஷ்மீரை நேசிக்கிறான், காஷ்மீருக்கு செல்ல வேண்டுமென விரும்புகிறான். சில நெறிக்கெட்டுப் போன சக்திகள் காஷ்மீரின் மாபெரும் பாரம்பரியத்தைக் கெடுப்பதற்கு முயற்சி மேற்க் கொண்டுள்ளன என பிரதமர் கூறினார்.

காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய அரசு விரும்புகிறது என்று பிரதமர் கூறினார். காஷ்மீரை “பூமியின் சொர்க்கம்” ஆக மாற்றும் நெடு நோக்குடன் முன்னோக்கி செல்ல வேண்டுமென காஷ்மீர் இளைஞர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். காஷ்மீர் அமைதியை விரும்புகிறது என்றும் காஷ்மீர் மக்கள் சுற்றுலா மூலம் கூடுதலாக சம்பாதிக்க விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மேம்பாட்டு மூலமாகத் தீர்வுகளைக் காண மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயியின் மனிதநேயம், மக்கள்நேயம் மற்றும் காஷ்மீர் நேயம் என்ற நெடுநோக்கு முன்னெடுத்துச் செல்லப்படும் என்று அவர் கூறினார்.

தேசத்தை புதிய உயர்வினை நோக்கிக் கொண்டு செல்லும் பொது மன உறுதியுடன் சேர்ந்து உழைப்பது நமது அனைவரின் இப்போதைய முக்கியமான தேவை என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் மூவர்ணக்கொடி நம்மை இணைக்கிறது நமக்கு உத்வேகம் அளிக்கிறது இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றி எழுதத் தூண்டுகிறது.

பின்னர் பிரதமர் 70வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களை துவக்கி வைக்கும் வகையில் மூவர்ண கொடி யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.

***