Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

4-வது சர்வதேச யோகா தினத்தன்று பிரதமரின் உரை

4-வது சர்வதேச யோகா தினத்தன்று பிரதமரின் உரை

4-வது சர்வதேச யோகா தினத்தன்று பிரதமரின் உரை

4-வது சர்வதேச யோகா தினத்தன்று பிரதமரின் உரை


 

உலகின் சக்திகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தும் மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக யோகா மாறியுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற 4வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர்களிடையே அவர் உரையாற்றினார்.  வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் திரண்டிருந்த சுமார் ஐம்பதாயிரம் யோகா  ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் பிரதமர், யோகாசனம், மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றை மேற்கொண்டார்.

  “ இன்று உலகம் முழுவதிலும் உள்ள அனைவருக்கும் இது ஒரு பெருமிதமான தருணமாகும். மக்கள் யோகாவுடன், சூரியனின் வெம்மையையும், பிரகாசத்தையும் வரவேற்கின்றனர். டேராடூனிலிருந்து டப்ளின் வரை, ஷாங்காயிலிருந்து சிகாகோ வரை, ஜகார்த்தா முதல் ஜோஹன்னஸ்பர்க் வரை  எல்லா இடத்திலும் யோகா பரவியுள்ளது “ என்று பிரதமர் கூறினார். 

 உலகம் முழுவதும் யோகாவை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் பயனாக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது என்று  உலக முழுவதிலும் உள்ள யோகா ஆர்வலர்களுக்கு மிகத் தெளிவானச் செய்தியை பிரதமர்  வெளியிட்டார்.  உடல் ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வுக்கு வழிவகுக்கும் யோகா தினம், மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

  உலகத்தின் இதரப் பகுதிகள் நம்மை மதிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், நமது பாரம்பரிய, தொன்மை வாய்ந்த பெருமைகளை மதிக்க நாம் தயங்கக் கூடாது என்று பிரதமர் கூறினார். யோகா மிகவும் பழமையானது, அதேசமயம் நவீனத்துடன் கூடியது. நிலையான அதேசமயம் மாறுதல்களை ஏற்கக் கூடியது. அது நமது கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்திற்கு ஏற்றதாக சிறப்பானதாக திகழ்வதுடன், வருங்காலத்திற்கான நம்பிக்கை ஒளியையும் அளிக்கிறது.

   யோகாவின் ஆற்றல் பற்றி குறிப்பிட்ட பிரதமர், மக்கள் தனியாகவோ அல்லது சமுதாயமாகவோ சந்திக்கும், பல்வேறு பிரச்னைகளுக்கு யோகா சிறந்த தீர்வாகும் என்று கூறினார். தேவையற்ற படபடப்பு மற்றும் பதற்றத்தை அகற்றி, அமைதியான சிறப்பான வாழ்க்கையை நடத்திச் செல்ல யோகா உதவ முடியும் என்று அவர் கூறினார். “பிரிப்பதற்கு பதிலாக யோகா ஒன்றுபடுத்துகிறது, விரோதத்திற்கு பதிலாக யோகா ஒற்றுமைப்படுத்துகிறது, பாதிப்பை அதிகரிப்பதற்கு பதிலாக யோகா அதை குணப்படுத்துகிறது”  என்று பிரதமர் தெரிவித்தார்.