தில்லி கரியப்பா மைதானத்தில் வரும் 28-ந் தேதி மாலை 5.45 மணியளவில் நடைபெற உள்ள வருடாந்திர என்சிசி பிரதமர் பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
இந்த ஆண்டு என்சிசி தொடங்கப்பட்ட 75 –வது ஆண்டை கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில், என்சிசியின் வெற்றிகரமான 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், பிரதமர் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளார். இந்தக் கூட்டம் மெய்நிகர் வடிவில் பகல் இரவு நிகழ்ச்சியாக நடைபெறும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் கருப்பொருளைக் கொண்ட கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. உலகமே ஒரே குடும்பம் என்னும் இந்தியர்களின் உண்மையான உணர்வில் 19 வெளிநாடுகளைச் சேர்ந்த 196 அதிகாரிகள் மற்றும் மாணவர் படையினர் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
***
(Release ID: 1893990)
PKV/RR/KRS