Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற செய்தி அருணாச்சலப் பிரதேச கிராமத்தில் எதிரொலிக்கிறது

2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற செய்தி அருணாச்சலப் பிரதேச கிராமத்தில் எதிரொலிக்கிறது


வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வரலாற்றுச் சிறப்புமிக்க 10,000ஆவது மக்கள் மருந்தக மையைத்தைப் பிரதமர் அர்ப்பணித்தார். மேலும், நாட்டில் உள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 என்பதிலிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தையும் திரு. மோடி தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை வழங்குதல் மற்றும் மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 என்பதிலிருந்து 25,000 ஆக உயர்த்துதல் என்ற இரண்டு முன்முயற்சிகளையும் பிரதமர் இந்த ஆண்டின் தனது சுதந்திர தின உரையின் போது அறிவித்தார். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை இந்த நிகழ்வு குறிக்கிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் நம்சாய் பகுதியைச் சேர்ந்த திரு லகர் பாலெங், அரசு உதவியுடன் தாம் கட்டிய அடிப்படை வசதிகள் கொண்ட வீடு குறித்துப் பிரதமரிடம் தெரிவித்தார். ஜெல் ஜீவன் இயக்கத்தால் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் அவர் கூறினார்.

பிரதமரை ‘ஜெய்ஹிந்த்’ என்று திரு லக்கர் வரவேற்றார். இதற்கு பதிலளித்த பிரதமர், அருணாச்சலப் பிரதேசத்தில் ஜெய்ஹிந்த் என்பது மிகவும் பிரபலமான வாழ்த்து என்றும், அருணாச்சலப் பிரதேச மக்களுடன் உரையாடுவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்.

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை பற்றி அவரது கிராமப் பஞ்சாயத்து மூலம் திரு லக்கருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் 2047 க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உள்ளார்ந்த செய்தி அவருக்கு மிகவும் தெளிவாக இருந்தது. கிராம மக்கள் 5 குழுக்களை அமைத்து, 5 கிராமங்களுக்குச் சென்று வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் ஒரு பகுதியாக  ‘மோடியின் உத்தரவாதம்’ வாகனம் வருவதைத் தெரிவிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

***

ANU/SMB/IR/RR/KPG