பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, கால்நடைத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக திருத்தியமைக்கப்பட்ட தேசிய கால்நடை இயக்கத்திற்கு( (ராஷ்ட்ரிய கோகுல் மிஷன்)
ஒப்புதல் அளித்தது. 2021-22 முதல் 2025-26 வரையிலான பதினைந்தாவது நிதிக்குழு காலத்தின் போது, 1000 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீட்டில், அதாவது 3400 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இதில் இரண்டு புதிய செயல்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன: (i) மொத்தம் 15,000 கிடேரிகளைக் கொண்ட 30 குடியிருப்பு வசதிகளை உருவாக்க செயலாக்க முகமைகளுக்கு கிடேரி வளர்ப்பு மையங்கள் அமைப்பதற்கான மூலதன செலவில் 35% ஒரு முறை வழங்குதல்
(ii) உயர் மரபுத் தன்மை கொண்ட கிடாரிகளை(கன்று ஈனாத இளம் பசு)வாங்குவதற்கு விவசாயிகளை ஊக்குவித்தல், பால் ஒன்றியங்கள் / நிதி நிறுவனங்கள் / வங்கிகளிடமிருந்து விவசாயிகள் வாங்கும் கடனுக்கு 3% வட்டி மானியம் வழங்குதல்.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய கால்நடை (ராஷ்ட்ரிய கோகுல்) இயக்கத்திற்கு 15-வது நிதிக்குழு சுழற்சியில் (2021-22 முதல் 2025-26 வரை) ₹3400 கோடி ஒதுக்கீட்டுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பால் உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கும், இறுதியில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். இந்த முயற்சி உற்பத்தித் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பால்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள 8.5 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும்.
***
(Release ID: 2112788)
TS/PLM/AG/KR