பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (19.06.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவை, 2024-25 சந்தைப் பருவத்திற்கு கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளுக்கு சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டுக்கு அதிக அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி எள்ளின் விலை குவிண்டாலுக்கு ரூ. 632-ம், காட்டு எள்ளின் (நைகர் சீட்) விலை குவிண்டாலுக்கு ரூ. 983-ம், துவரம்பருப்பு குவிண்டாலுக்கு ரூ. 550-ம் அதிகரிக்கும்.
நெல்லின் விலை குவிண்டாலுக்கு ரூ. 117-ம், சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ. 191-ம், கேழ்வரகு விலை குவிண்டாலுக்கு ரூ. 444-ம், மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ. 135-ம், பயத்தம் பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ. 124-ம் அதிகரிக்கும்.
எண்ணெய் வித்துகளை பொறுத்தவரை நிலக்கடலை விலை குவிண்டாலுக்கு ரூ. 406-ம், சூரியகாந்தி விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ. 520-ம், சோயாபீன் (மஞ்சள்) விதையின் விலை குவிண்டாலுக்கு ரூ. 292-ம் அதிகரிக்கும்.
நடுத்தர இழை மற்றும் நீள இழை பருத்தியின் விலை குவிண்டாலுக்கு ரூ. 501 அதிகரிக்கும்.
அகில இந்திய அளவில் சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது என மத்திய பட்ஜெட் 2018-19-ல் அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப, 2024-25 சந்தைப் பருவத்தில் கரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2026697
————–
AD/SMB/RS/DL
देशभर के अपने किसान भाई-बहनों के कल्याण के लिए हमारी सरकार निरंतर अहम कदम उठा रही है। इसी दिशा में आज कैबिनेट ने वर्ष 2024-25 के लिए सभी प्रमुख खरीफ फसलों के न्यूनतम समर्थन मूल्य में वृद्धि को मंजूरी दी है। https://t.co/uCHvv36mtn
— Narendra Modi (@narendramodi) June 19, 2024