Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2022-23 முதல் 2025-26 வரையிலான 15 ஆவது நிதி ஆணையத்தின் எஞ்சிய நான்கு ஆண்டுகளுக்கு “பிரதமரின் வடகிழக்குப் பிராந்தியத்திற்கான வளர்ச்சி முன்முயற்சி” என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது


2022-23 முதல் 2025-26 வரையிலான 15 ஆவது நிதி ஆணையத்தின் எஞ்சிய நான்கு ஆண்டுகளுக்கு “பிரதமரின் வடகிழக்குப் பிராந்தியத்திற்கான வளர்ச்சி முன்முயற்சி” என்ற புதிய திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.  100 சதவீதம் மத்திய அரசின் நிதியிலான இந்த புதிய திட்டத்தை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் அமலாக்கும். 

இந்த நான்காண்டு காலத்திற்கான திட்ட ஒதுக்கீடு ரூ.6600 கோடியாக இருக்கும். 

2025-26-க்குள் திட்டங்களை நிறைவு செய்ய முயற்சி மேற்கொண்டிருப்பதால், இதற்குப் பிறகு முடிக்க வேண்டிய பணிகள் இருக்காது.   இதற்கான நிதி ஒதுக்கீடு  தொடக்கத்தில்  2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் அனுமதிக்கப்படும்.  செலவினம் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகள் வரை தொடரும்.  இந்த ஆண்டுக்குள் பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்தப்படும். 

அடிப்படை கட்டமைப்பு, துணை தொழில்கள், சமூக வளர்ச்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான  வாழ்வாதாரத் திட்டங்களை உருவாக்குதல் போன்றவற்றுக்கு “பிரதமரின் வடகிழக்குப் பிராந்தியத்திற்கான வளர்ச்சி முன்முயற்சி” என்ற புதிய திட்டம் வழிவகுக்கும்.

**************