Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் தீபக் புனியாவுக்கு பிரதமர் வாழ்த்து


ஹாங்சோவில் நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் மல்யுத்த 86 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபக் புனியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக ஊடகப்பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“தீபக் புனியாவின் அபாரமான செயல்திறன். ஆண்களுக்கான மல்யுத்த 86 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள்.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் உள்ளுணர்வு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. அவை இந்த அற்புதமான செயல் திறனுக்கு வழிவகுத்தது.”

***

ANU/PKV/BS/DL