Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2020-21-ல் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சரவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது


தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ருபெல்லா (எம்எம்ஆர்), குழந்தை இறப்பு விகிதம் (ஐஎம்ஆர்), 5வயதுக்கு உட்பட்ட குழந்தை பிறப்பு விகிதம் (யூ5எம்ஆர்), மொத்த கருத்தரிப்பு விகிதம் (டிஎஃப்ஆர்) ஆகியவற்றில்  அதிகரித்து வரும் வீழ்ச்சி உட்பட 2020-21- நிதியாண்டில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சரவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காசநோய், மலேரியா, டெங்கு, தொழுநோய், மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு நோய்கள் குறித்த திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

 இவற்றுக்கு ஏற்பட்டுள்ள  செலவுத்தொகை: ரூ.27,989.00 கோடி (மத்திய அரசின் பங்கு)

பயனாளிகள்:

 சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் மீது தனிகவனம் செலுத்துவதுடன் பொதுசுகாதார நிலையங்களுக்கு வருகின்ற அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதாக தேசிய சுகாதார இயக்கம் அமலாக்கப்படுகிறது.

 2025-க்கான இலக்குகள்:

  • 113-ல் இருந்து 90 ஆக எம்எம்ஆர் குறைப்பு
  • 32-ல் இருந்து 23 ஆக ஐஎம்ஆர் குறைப்பு
  • 36-ல் இருந்து 23 ஆக யூ5எம்ஆர் குறைப்பு
  • 2.1 என்ற அளவிற்கு டிஎஃப்ஆர் நீடிக்க செய்வது
  • காசநோயை 2025-க்குள் நாட்டில் இருந்து முற்றிலுமாக ஒழித்தல்

பின்னணி தகவல்:

 2005-ல் தொடங்கப்பட்ட தேசிய ஊரக சுகாதார இயக்கம் பின்னர் 2017 ஏப்ரல் 1 முதல் தேசிய சுகாதார இயக்கமாக மாற்றப்பட்டு, தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.  இந்த இயக்கத்தை 01.04.2021 முதல் 31.03.2026 வரை அல்லது அடுத்த ஆய்வுக்காலம் வரை (இவற்றில் எது முந்தையதோ அதுவரை) நடத்துவதற்கான ஒப்புதலை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை ஒப்புதல் அளித்தது.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862937

*************