Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2018-19 நிதியாண்டில் தூய்மை இந்தியா இயக்கத்திற்கான கூடுதல் பட்ஜெட் நிதி ஆதாரத்தை 15,000 கோடி ரூபாய்க்கு உயர்த்தும் முடிவுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்


 

 

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கீழ்க்கண்ட ஒப்புதலை வழங்கியுள்ளது.

 

  1. நபார்டு மூலமாக 2018-19 நிதியாண்டில் தூய்மை இந்தியா திட்டத்திற்கான கூடுதல் பட்ஜெட் நிதி ஆதாரத்தை 15,000 கோடி ரூபாய்க்கு உயர்த்தும் முடிவுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்.
  2. குடிநீர் தரத்திற்கான சர்வதேச மையம் ஆற்றும் விரிவாக்கம் குடிநீருக்கான தேசிய மையம் என்ற பெயர் மாற்றம், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கூடுதலான பட்ஜெட் நிதி ஆதாரத்தைப் பெறுவதற்கு துப்புரவு மற்றும் தரத்தின் பணிக்கான விரிவாக்கத்தோடு மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்பாட்டு முகமைகளுக்கு நிதியை பகிர்ந்தளிப்பதற்கும் அதனை திரும்பப் பெறுவதற்கான அதிகாரத்தை இவ்வமைப்பு பெற்றிருக்கும்.
  3. குடிநீர் தரத்திற்கான சர்வதேச மையத்தின் பெயரை குடிநீர், துப்புரவு மற்றும் தரத்திற்கான தேசிய மையமாக பெயர் மாற்றம்.

 

தாக்கம்:

இந்த முடிவினால் தூய்மை இந்தியா இயக்கத்தின் கிராம திட்டம் மற்றும் திடப்பொருள் திரவ நிர்வாகத்தின் செயல்பாட்டினால் பலன் அடைந்த 1.5 கோடி கிராம குடியிருப்புக்கள் பயன்பெறும்.

 இந்த நிதி ஆதாரம் நாட்டில் உள்ள கிராமங்கள் திறந்தவெளி கழிவறைகள் அற்றவைகளாக ஆக்க பயன்படுத்தப்படும்.

செலவினம்:

ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளின்படி கடன்தொகையான 15,000 கோடி ரூபாய் ஒரே முறையில் பத்தாண்டுகளின் முடிவில் நபார்டுக்கு திருப்பிக் கொடுக்கப்படும். இந்த கூடுதல் பட்ஜெட் நிதி ஆதாரம் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிதி ஆதாரம் மற்றும் செலவினத்தின் அடிப்படையில் நபார்டிலிருந்து பெறப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள செயல்பாட்டு முகமைகளுக்கு ஒதுக்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்திலிருந்து நிதி ஆதாரங்களைப் பெறவும், மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள செயல்பாட்டு முகமைகளுக்கு பகிர்ந்தளிக்கவும், வட்டியோடு கூடிய கடனை திரும்பச் செலுத்தவும், குடிநீர், துப்புரவு மற்றும் தரத்திற்கான தேசிய மையம் வாங்கி வழங்கும் முகமையாக செயல்படும்.

இது குறிப்பிட்ட கால வரையறைக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் இலக்குகளை சாதிக்க தேவையான நேரத்துடனான நிதி பெற உதவும்.

பின்னணி:

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதிக்கும் நாட்டின் கிராமப்புறங்கள் துப்புரவு வசதி பெறும் நோக்கத்தோடு தூய்மை இந்தியா திட்டம் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. ஐ.எச்.எச்.எல்.எஸ். எனப்படும் தனிநபருக்கான குடியிருப்பு கழிவறைகளைக் கட்டுவதற்கு தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு ஊக்கத் தொகையாக 12,000 ரூபாய் மத்திய அரசு மாநிலங்களும் வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரப் பங்கீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எஸ்.எல்.டபிள்யூ.என். செயல்பாட்டிற்கு முறையே 150/300/500  மற்றும் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புக்களை உடைய கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிக அளவிலான ரூபாய் 7/ 12/ 15/ 20 லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. ஐஇசி…. மாநில மற்றும் மாவட்ட அளவில் திட்டத்திற்கான முழு செலவில் 50 சதவீதமும் மத்திய அளவில் 2 சதவீதமும் செலவிடப்படும். நிர்வாக செலவீனத்திற்கென திட்டத்திற்கான முழு செலவில் இரண்டு சதவீதம் வரை கொடுக்கப்படும். இந்த செயல்பாடுகளுக்கு மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான பங்கீட்டு முறை 60க்கு 40 என்ற அளவில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் ஜம்மு, காஷ்மீர் மற்றும் சிறப்பு அந்தஸ்த்துக் கொண்ட மாநிலங்களுக்கு நிதி பங்கீட்டு முறை 90க்கு 10 என்ற அளவில் உள்ளது.

கிராமப்புறங்களின் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் துப்புரவு விரைவாக முன்னேறியுள்ளது. சென்ற மாதம் 31-ந்தேதி வரை இந்தியாவில் 88.9 சதவீதப்பகுதி துப்புரவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி முதல் திறந்தவெளி கழிவறைகள் அற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள 4.6 லட்சம் கிராமங்கள், 419 மாவட்டங்கள், 19 மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களில் 7.94 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் திறந்தவெளி கழிப்பறைகள் அற்ற நாடாக மாறுவதற்கு இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதிக்கும் நாட்டின் கிராமப்புறங்கள் துப்புரவு வசதி பெறும் நோக்கத்தோடு தூய்மை இந்தியா இயக்கம் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏற்பட்டு இந்த இயக்கம் தனது இறுதி நிலையை எட்டும் தருணத்தில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களிலும் துரிதமான முன்னேற்றம் காணப்படுகிறது.

2018-19ஆம் ஆண்டில் தூய்மை இந்தியா இயக்கத்தின் இலக்குகளை அடைவதற்கான நிதித் தேவைகளை தமது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் 30,343 கோடி ரூபாயை ஒதுக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதில் 15,343 கோடி ரூபாய் பொது பட்ஜெட்டின் உதவியோடும், எஞ்சிய 15,000 கோடி ரூபாய் கூடுதல் பட்ஜெட் நிதி ஆதாரத்தோடும் சமாளிக்க திட்டமிடப்பட்டது. இதனால் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலரின் தலைமையிலான கூடுதல் பட்ஜெட் நிதி ஆதாரத்திற்கான செயல்பாட்டுக்குழு நபார்டு மூலமாக 2018-19ஆம் ஆண்டிற்கு தூய்மை இந்தியா இயக்கத்திற்கான கூடுதல் பட்ஜெட் நிதி ஆதாரத்தை 15,000 கொடி ரூபாய்க்கு உயர்த்த பரிந்துரை செய்தது.

*****