Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2017 தொகுப்பு ஐ.பி.எஸ் பயிற்சி அலுவலர்கள் பிரதமருடன் சந்திப்பு


2017 ஆம் ஆண்டு தொகுப்பினைச் சேர்ந்த சுமார் 100 இந்திய காவல் பணிப் பயிற்சி அலுவலர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினர்.

பயிற்சி அலுவலர்களுடன் பேசிய பிரதமர், அவர்கள் மேற்கொள்ள உள்ள பல்வேறு பொறுப்புகளில் அர்ப்பணிப்புடனும் சிறப்பாகவும் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

பணியின் போது உயிர் இழந்த 33,000 காவல் படையினரின் தியாகத்தை பிரதமர் நினைவுக்கூர்ந்தார்.

சிறந்த நிர்வாகம், ஒழுக்கம் மற்றும் நடத்தை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், தடய அறிவியல் போன்றவையும் இந்த சந்திப்பின்போது போது விவாதிக்கப்பட்டன.