Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2017ம் ஆண்டு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திருத்த மசோதா 2017 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த திருத்த மசோதா ஆந்திர மாநிலம் கர்னூல் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தை (IITDM) இதர இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இணையாக மாற்ற வகைசெய்கிறது. இதனையடுத்து, கர்னூல் ஐ.ஐ.டி.டி.எம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டு அதில் பயிலும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும் அதிகராம் பெறும்.

கர்னூல் ஐ.ஐ.டி.டி.எம் செயல்படுத்துவதற்கு ஆகும் செலவினம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்ட நிதியிலிருந்து வழங்கப்படும்.

தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தில் திறன்பெற்ற தொழில்நுட்ப மனித வளத்திற்கான வளர்ந்துவரும் தேவைகள் இந்த நிறுவனத்தில் பயிற்சிபெற்ற இளைஞர்கள் தொகுப்பிலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் பாலினம், இனம், சமயம், உடல்தகுதி, குடியிருக்கும் பகுதி, இனச்சார்பு, சமூக பொருளாதார பின்னணி, வேறுபாடுகள் ஏதுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் கல்விபெற வசதி அளிக்கும்.

பின்னணி­

2014ம் ஆண்டு இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டம் அனைத்து இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் அந்தஸ்து வழங்குகிறது. மேலும், நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் அதிகாரங்களை சட்டம் வழங்குகிறது. அதனையடுத்து, ஆந்திர பிரதேசத்தில் உள்ள கர்னூலில் புதிய தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்க அரசு அனுமதியளித்தது. 2014 ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி, இது மேற்கொள்ளப்பட்டது. புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சேர்க்கப்பட்டிருப்பதால் 2014 இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்படவேண்டும். இதனையடுத்து, கர்னூல் ஐ.ஐ.டி.டி.எம் மத்திய உதவிபெறும் இத்தகைய நிறுவனங்களில் ஐந்தாவது உறுப்பினராகிறது.

கர்னூல் ஐ.ஐ.டி.டி.எம் ல் 2015­16 ம் ஆண்டு இரண்டு பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முடிந்து கல்வி அமர்வுகள் தொடங்கிவிட்டன.

­­­­­­