Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2016 கடலாண்மை ( கடல்சார் கோரிக்கைகள் தீர்ப்பு உரிமை) மசோதா மசோதாவுக்கும் மிகவும் பழமையான ஐந்து கடலாண்மை சட்டங்களை திரும்பப் பெறுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று கடலாண்மை ( கடல்சார் கோரிக்கைகள் தீர்ப்பு உரிமை) மசோதா 2016 மசோதாவுக்கும் மிகவும் பழமையான ஐந்து கடலாண்மை சட்டங்களை திரும்பப் பெறுவதற்கும் ஒப்புதல் வழங்கியது.

இந்த மசோதா தற்போதுள்ள கடலாண்மை நீதிமன்றங்களின் விசாரணை வரம்பு, கடல்சார் கோரிக்கை சார்ந்த கடலாண்மை நடவடிக்கை, கப்பல்களை சிறைபிடித்தல் மற்றும் தொடர்பான பிரச்சினைகள் குறித்த தற்போதைய சட்டங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த ஒப்புதல் மிகவும் பழையதாகிவிட்ட ஆங்கிலேயர்கால சட்டங்களான (a) 1840 கடலாண்மை நீதிமன்றச் சட்டம் (b) 1861 கடலாண்மை நீதிமன்றச் சட்டம் (c) 1890 காலனி கடலாண்மை நீதிமன்றச்சட்டம் (d) 1891 காலனி கடலாண்மை நீதிமன்ற (இந்தியா) சட்டம் (e) பம்பாய், கல்கத்தா, சென்னை உயர்நீதிமன்றங்கள் 1865 உரிமைக் கடிதங்கள் பிரிவுகள் சட்டம்.

2016 கடலாண்மை மசோதாவின் முக்கிய அம்சங்கள்

கடல்சார் சட்ட வல்லுநர்களின் நீண்டநாள் கோரிக்கையை இந்த சட்ட மசோதா நிறைவு செய்கிறது. இதன்முக்கிய அம்சங்கள் வருமாறு

• இந்தியாவின் கடலோர மாநிலங்களில் அமைந்துள்ள உயர்நீதிமன்றங்களுக்கு கடலாண்மை விசாரணை உரிமையை மசோதா அளிக்கிறது. இந்த விசாரணை உரிமை வரம்பு பிராந்திய கடல் எல்லை வரை நீடிக்கும்.

• இந்த விசாரணை வரம்பு விரிவாக்கப்படக் கூடியது. இதற்கு மத்திய அரசின் அறிவிக்கை அவசியம். தனிப்பட்ட பொருளாதார மண்டலங்கள் அல்லது இதர இந்திய கடல்சார் மண்டலங்கள் அல்லது இந்தியப் பகுதியில் அமைந்துள்ள தீவுகள் ஆகியவற்றுக்கு விரிவாக்கப்படும்.

• இந்த மசோதா அனைத்து கப்பல்களுக்கும், அவற்றின் இருப்பிடம் சொந்தக்காரரின் குடியுரிமை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு பொருந்தும்.

• உள்நாட்டு கப்பல்கள், கட்டுமானத்தில் இருக்கும் கப்பல்கள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்படும். எனினும், மத்திய அரசு அறிவிக்கையின் மூலம் இவற்றுக்கும் இச்சட்டத்தை பொருந்தச் செய்யலாம்.

• இந்தச் சட்டம் போர்க் கப்பல்கள், கடற்படை துணைக் கப்பல்கள் ஆகியவற்றுக்கு பொருந்தாது.

• இச்சட்டத்தின்படியான விசாரணை வரம்பு இதில் பட்டியலிடப்பட்டுள்ள கடல்சார் கோரிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

• கடல்சார் கோரிக்கைகளுக்கு எதிரான ஜாமீனை உறுதி செய்யும் வகையில் சில சந்தர்ப்பங்களில் கப்பல்களை கைது செய்ய முடியும்.

• தெரிவு செய்யப்பட்ட கடல்சார் கோரிக்கைகள் தொடர்பான கப்பல்கள் சார்ந்த பொறுப்புகள் அவற்றின் புதிய சொந்

தக்காரர்களுக்கும் சில வரம்புகளுக்கு உட்பட்டு பொருந்தும்.

• இந்த மசோதாவில் குறிப்பிடப்படாத விஷயங்கள் குறித்த அம்சங்களில் 1908ம் ஆண்டு சிவில் நடைமுறைச் சட்டம் பொருந்தும்.

பின்னணி

இந்தியா முன்னணி கடல்சார் நாடாகும். அதன் சரக்கு வர்த்தக அளவில் சுமார் 95 சதவீதம் கடல் மார்க்கமாக நடைபெறுகிறது. எனினும், தற்போதைய சட்ட அமைப்பின்படி இந்திய நீதிமன்றங்களின் கடலாண்மை விசாரணை வரம்பு ஆங்கிலேயர்கால சட்டங்களின்படி அமைந்துள்ளது. கடலாண்மை விசாரணை வரம்பு உயர்நீதிமன்றங்களின் அதிகாரம் தொடர்பானவை. கடல்மார்க்கமாக, கப்பல் போக்குவரத்து வசதியுள்ள நீர்வழிப்பாதை மார்க்கமாக நடைபெறும். கப்பல் கோரிக்கைகள் தொடர்பானவை இந்த அதிகாரம். பழையதாகிப்போன ஐந்து கடலாண்மை சட்டங்களை விலக்கிக் கொள்வது திறம்பட்ட ஆட்சி நிர்வாகத்திற்கு இடையூறாக உள்ள பழைய சட்டங்களை அகற்றி விடும் அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ற நடவடிக்கையாகும்.