செகந்தராபாத் மண்டல ரயில்வே பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள 200 ஆண்டு பழமைவாய்ந்த பாரம்பரிய கிணற்றைப் புதுப்பிப்பதற்கான முயற்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார். மேலும், செகந்தராபாத் மண்டல ரயில்வே பயிற்சி நிறுவனம், தண்ணீர் சேமிப்பு வசதிக்காக அதைச் சுற்றிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளைக் கட்டமைத்துள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து, பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இது பாராட்டுக்குரிய முயற்சி.”
***
SRI / SMB / DL
This is a laudatory effort. https://t.co/OcOdjnCxoO
— Narendra Modi (@narendramodi) February 26, 2023