20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்ட போட்டியில் 16 பதக்கங்கள் வென்ற (ஆடவர் மற்றும் மகளிர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தலா 7 மற்றும் கிரேக்கோ-ரோமன் பிரிவில் 2) இந்திய மல்யுத்த வீரர்கள் குழுவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
“நமது மல்யுத்த வீரர்கள் மீண்டும் நமக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன் பட்டப் போட்டியில் 16 பதக்கங்கள் வென்ற (ஆடவர் மற்றும் மகளிர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தலா 7 மற்றும் கிரேக்கோ-ரோமன் பிரிவில் 2) இந்திய மல்யுத்த வீரர்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள். இது இந்தியாவின் மிகச் சிறப்பான செயல்பாடு. எதிர்கால இந்திய மல்யுத்தம், பாதுகாப்பான கரங்களில் இருப்பதை இது உணர்த்துகிறது.”
***************
(Release ID: 1853712)
Our wrestlers make us proud again! Congratulations to our team on winning 16 medals (7 each in Men's and Women’s freestyle and 2 in Greco-Roman) at the U20 World Championships. This is India’s best-ever performance. It also shows the future of Indian wrestling is in safe hands! pic.twitter.com/4vQTQtUKv2
— Narendra Modi (@narendramodi) August 22, 2022