கடும் சூறாவளிப் புயலாக ‘அம்பன்’ புயல் வங்காள விரிகுடாவில் இன்று உருப்பெற்று இருக்கிறது.
‘அம்பன்’ கடும் சூறாவளிப் புயலால் ஏற்படக்கூடும் நிலைமையை
சமாளிக்க, தொடர்புடைய மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/ முகமைகள் ஆகியவற்றின் தயார்நிலையை பிரதமர் திரு. நரேந்திர
மோடி ஆய்வு செய்தார். இந்திய அரசின் மூத்த அதிகாரிகள், இந்திய
வானிலைத் துறை, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசியப் பேரிடர் நிவாரணப் படையின் அதிகாரிகளோடு மத்திய
உள்துறை அமைச்சர், திரு. அமித் ஷாவும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
மே 20ஆம் தேதி பிற்பகல், அதிகபட்சமாக மணிக்கு 195 கிலோமீட்டர்
வேகத்தில் மிகக் கடும் சூறாவளிப் புயலாக மேற்கு வங்கத்தில் இது கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலைத் துறை தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் அதிகம் மற்றும் மிக அதிக மழையை அது உண்டாக்கக்கூடும்.
புயலின் வழியில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை முழுவதுமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றத் தேவையான அனைத்து
நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அத்தியாவசியப் பொருள்களின்
விநியோகத்தை தேவையான அளவில் பராமரிக்குமாறும் பிரதமர்
அறிவுறுத்தினார்.
மின்சாரம், தொலைத் தொடர்பு ஆகிய அத்தியாவசிய சேவைகளுக்கு
பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்யத் தேவையான முன்னேற்பாடு
களை செய்யுமாறும், அவற்றின் தயார் நிலையை சரியான நேரத்தில் ஆய்வு செய்து பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் சேவைகளை விரைவில் தொடர அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறும் தொடர்புடைய அனைவரும் அறிவுறுத்தப்பட்டனர்.
நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்தியக் கடலோரக் காவல் படையும், கடற்படையும் கப்பல்களையும் ஹெலிகாப்டர் களையும் தயார்படுத்தியுள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள ராணுவம் மற்றும் விமானப் படை அலகுகளும் தயார்நிலையில் உள்ளன.
ஒடிசாவுக்கும், மேற்கு வங்கத்துக்கும் 25 குழுக்களை தேசியப் பேரிடர் நிவாரணப் படையை அனுப்பியுள்ளது. கூடுதலாக 12 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. படகுகள், மரம் வெட்டும் கருவிகள், தொலைத் தொடர்பு கருவிகள் உள்ளிட்ட தேவைப்படும் பொருள்கள் இந்தக் குழுக்களுக்குத் தரப்பட்டுள்ளன.
தொடர்புடைய அனைத்து மாநிலங்களுக்கும் தொடர் அறிக்கைகளை சமீபத்திய முன்னறிவுப்புகளோடு இந்திய வானிலைத் துறை வழங்கி வருகிறது. மாநில அரசோடு மத்திய உள்துறை அமைச்சகமும் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
***
(வெளியீட்டு அடையாள
Reviewed the preparedness regarding the situation due to cyclone ‘Amphan.’ The response measures as well as evacuation plans were discussed. I pray for everyone's safety and assure all possible support from the Central Government. https://t.co/VJGCRE7jBO
— Narendra Modi (@narendramodi) May 18, 2020