பிரதமர் – வருக நண்பர்களே!
இலங்கை வீரர் – நன்றி, நன்றி ஐயா!
பிரதமர் – வருக!
பிரதமர் – உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அணி இந்திய மக்கள் இன்னும் அன்புடன் நினைவில் வைத்திருக்கும் ஒரு அணிஎன்று நான் உணர்கிறேன். நீங்கள் இந்திய அணியை வீழ்த்திய தருணத்தை நாடு மறக்கவில்லை.
இலங்கை வீரர் – ஐயா, இன்று உங்களைப் பார்ப்பது பெரிய கௌரவம் மற்றும் பாக்கியம், மிக்க நன்றி. இந்த நேரத்தையும் வாய்ப்பையும் எங்களுக்கு வழங்கியதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
பிரதமர் – உங்களில் எத்தனை பேர் இன்னும் இந்தியாவுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பைப் பேணி வருகிறீர்கள்?
இலங்கை வீரர் – எல்லோரும்தான் என்று நினைக்கிறேன்.
பிரதமர் – அப்படியா. சனத் உங்களுக்கு எப்படி இந்தியாவுடன் தொடர்பு இருக்கிறது?
இலங்கை வீரர் – சார், நான் மும்பை இந்தியன்ஸுடன் இருந்தேன், இங்குள்ள பெரும்பாலான மற்றவர்களும் ஐபிஎல்லில் விளையாடினர்.
பிரதமர் – நீங்கள் ஐபிஎல்லில் விளையாடியுள்ளீர்கள்.
இலங்கை வீரர் –
அப்போது இலங்கை வீரர் குமார் தர்மசேனா நடுவராக இருந்தார்.
பிரதமர் – ஆம்.
இலங்கை வீரர் – ஆம், அதனால்…
பிரதமர் – 2010-ல் அகமதாபாத்தில் இந்தியா விளையாடியபோது நீங்கள் நடுவராக இருந்திருக்கலாம். அந்தப் போட்டியை பார்க்கப் போயிருந்தேன். அப்போது நான் முதல்வராக இருந்தேன். 1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது, 1996-ல் உங்கள் அணி அதை வென்றபோது, இரண்டு நிகழ்வுகளும் கிரிக்கெட் உலகைக் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றின. 1996-ம் ஆண்டில் உங்கள் அணி விளையாடிய விதம், ஒரு வகையில், டி20 சாயல் கிரிக்கெட்டின் தொடக்கம் என்று நான் நம்புகிறேன்.
நான் மற்றவர்களிடமிருந்தும் கேட்க விரும்புகிறேன் – இப்போதெல்லாம் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் தகவல் ஏதாவது இருக்கிறதா? நீங்கள் இன்னும் கிரிக்கெட்டுடன் இணைந்திருக்கிறீர்களா? நீங்கள் தற்போது பயிற்சியாளராக இருக்கிறீர்களா?
இலங்கை வீரர் – எங்களில் பெரும்பாலானோர் இன்னும் ஏதோ ஒரு வகையில் கிரிக்கெட்டில் ஈடுபட்டு வருகிறோம். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதை விட இன்று உங்களைச் சந்திப்பது அதிக அழுத்தத்தைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்!
இலங்கை வீரர் – நாங்கள் 1996-ல் உலகக் கோப்பையை வென்ற ஒரு சூழ்நிலையைப் பற்றி பேச விரும்புகிறோம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் நாங்கள் வென்றதற்கான காரணங்களில் ஒன்று, ஏனென்றால் அந்த நேரத்தில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வராத இரண்டு விஷயங்கள் இருந்தன, நாங்கள் …
பிரதமர் – குண்டு வெடிப்பு!
இலங்கை வீரர் – ஆம், இந்தியா எங்களுக்கு உதவியது. இது ஒரு பாதுகாப்பான இடம் என்பதை உலகுக்குக் காட்ட, விளையாட இந்தியாவை அனுப்புங்கள். இலங்கை உலகக் கோப்பையை வெல்ல இதுவும் ஒரு காரணம். எனவே இந்தியாவுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
பிரதமர் – இந்திய அணி இலங்கை செல்ல முடிவு செய்தது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது, குண்டு வெடிப்பு காரணமாக மற்ற அணிகள் பின்வாங்கிக் கொண்டிருந்தன. இந்தியாவின் செயலை உங்கள் வீரர்கள் எவ்வளவு பாராட்டினார்கள் என்பதை நான் கண்டேன்.
இந்த செயல் உங்கள் விளையாட்டு சமூகத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. இன்றும் இந்தியர்கள் அந்த விளையாட்டுத் திறனை நினைவில் வைத்திருக்கிறார்கள். ஒருபுறம் குண்டு வெடிப்பு வடிவில் பீதி; மறுபுறம், விளையாட்டு உணர்வு இருந்தது – பிந்தையது வெற்றி பெற்றது.
அதே உணர்வு இன்றுவரை தொடர்கிறது. 1996 குண்டு வெடிப்பு முழு இலங்கையையும் உலுக்கியதைப் போலவே, 2019-ம் ஆண்டில் இதேபோன்ற ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தபோது – தேவாலயத்திற்குள் குண்டு வெடிப்பு – அதன் பின்னர் இலங்கைக்கு பயணம் செய்த முதல் உலகத் தலைவர் நான் தான். அந்த நேரத்தில் குண்டு வெடிப்பு நடந்த போதிலும், இந்திய அணி இலங்கை வந்தது.
இந்த முறை குண்டு வெடிப்புக்குப் பிறகு நானே இலங்கைக்கு வந்திருக்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் நிற்கும் உணர்வு தொடர்கிறது என்பதை இது காட்டுகிறது. இதுதான் இந்தியாவின் நிலைத்த உணர்வு.
இலங்கை வீரர் – ஒரு இலங்கையாளனாக, ஒரு அண்டை நாடாக, நான் உங்கள் அகமதாபாத் மைதானத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக இருந்தேன், அது முழு உலகிலும் மிகப்பெரிய மைதானம். உண்மையில், அது கிரிக்கெட்டுக்கு ஒரு அருமையான சூழல் மற்றும் அருமையான மைதானம். எல்லோரும் அங்கு விளையாடுவதையும் நடுவர் பணி செய்வதையும் விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
இலங்கை வீரர் – சார், எனது முதல் சுற்றுப்பயணம் 1990-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்ததாகும். அதுதான் என் முதல் சுற்றுப்பயணம். எனக்கும் அதே நினைவுகள்தான். ஏனென்றால் நான் இந்தியாவில் ஒரு மாதம் இருந்தேன். ஐந்து நாளைக்கு முன்னர் வந்தேன். நாங்கள் அடிக்கடி இந்தியாவுக்கு சென்று வருகிறோம். இலங்கை நெருக்கடியில் இருக்கும்போதெல்லாம், குறிப்பாக நிதி ரீதியாக, இந்தியா எப்போதும் முன்வந்து ஆதரவை வழங்கும். எனவே இந்தியா எங்கள் சகோதரன் என்று நாங்கள் நினைப்பதால் நாங்கள் எப்போதும் இந்தியாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எனவே நாங்கள் இந்தியாவுக்குச் செல்லும்போது வீட்டில் இருப்பதுபோலவே உணர்கிறோம். எனவே நன்றி ஐயா. நன்றி.
இலங்கை வீரர் – ரொமேஷ் சொன்னது போல், இலங்கையில் அமைதியின்மை மற்றும் பிரச்சனைகள் இருந்தபோது, நாங்கள் பெட்ரோல், டீசல், மின்சாரம், விளக்குகள் இல்லாமல் இருந்தோம், நீங்களும் அரசும் எங்களுக்கு நிறைய உதவியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். எனவே எங்கள் நாட்டிற்கு உதவியதற்காக நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நன்றி கூறுகிறோம். இலங்கைக்கு உதவிய உங்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் ஐயா. மேலும், எனக்கு ஒரு சிறிய வேண்டுகோள் உள்ளது. ஐயா. நான் பயிற்சியாளராக உள்ள இலங்கை கிரிக்கெட் குழு தற்போது நாங்கள் யாழ்ப்பாணம் தவிர்த்து இலங்கை முழுவதும் விளையாடுகிறோம். யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானத்தை கொண்டு வர இந்தியா உதவ முடியுமானால்.. இலங்கை கிரிக்கெட்டின் பயிற்சியாளர் என்ற வகையில் நான் விரும்புகிறேன். அது யாழ்ப்பாணம், வடக்கு, கிழக்கு பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக அமையும். எனவே நாங்கள் வடக்கு பகுதியை தனிமைப்படுத்த மாட்டோம். எனவே அவர்களும் மிக நெருக்கமாக வருவார்கள். இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து பணியாற்றுவார்கள். நாங்கள் தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம், ஆனால் நீங்கள் யாழ்ப்பாணத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடினால் அது இன்னும் நெருக்கமாக இருக்கும். எனவே எனக்கு ஒரு சிறிய வேண்டுகோள் உள்ளது ஐயா, நீங்கள் ஏதாவது கொண்டு வர உதவ வேண்டும்
பிரதமர் – ஜெயசூரியாவிடமிருந்து இவை அனைத்தையும் கேட்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா எப்போதும் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்துள்ளது என்பது உண்மை. நமது அண்டை நாடுகள் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம், இந்தியா முடிந்தவரை விரைவாகவும் திறம்படவும் உதவி புரிய முற்படுகிறது. உதாரணமாக, மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்தியா தான் முதலில் எதிர்வினையாற்றியது என்பதை நீங்கள் நினைவு கூறலாம். நமது அண்டை மற்றும் நட்பு நாடுகளை கவனித்துக்கொள்வதும் ஆதரிப்பதும் இந்தியாவின் கடமை என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு பெரிய மற்றும் திறமையான நாடாக இருப்பதால், இந்தியா உடனடியாக செயல்பட வேண்டிய பொறுப்பை உணர்கிறது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இந்தியாவை உறுதியாக நம்பினர். அதிலிருந்து மீள சாத்தியமான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு ஆதரவும் உதவியும் வழங்கப்பட வேண்டும். இதை எங்கள் தார்மீகக் கடமையாக நாங்கள் கருதுவதால், எங்கள் பங்களிப்பை ஆற்ற நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். இன்றும் கூட, நீங்கள் கவனித்திருப்பீர்கள், நான் பல புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளேன். ஆனால் உண்மையில் என்னை நெகிழ வைத்தது யாழ்ப்பாணத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த அக்கறைதான். இலங்கையைச் சேர்ந்த ஒரு மூத்த கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட்டை யாழ்ப்பாணத்திலும் விளையாடுவதைக் காண விரும்புகிறார் என்ற சக்திவாய்ந்த மற்றும் நேர்மறையான செய்தியை இது அனுப்புகிறது. இந்த உணர்வே ஊக்கமளிக்கிறது. யாழ்ப்பாணம் பின்தங்கி விடக் கூடாது. சர்வதேச போட்டிகள் அங்கும் நடைபெற வேண்டும். உங்கள் ஆலோசனைக்கு குறிப்பிடத்தக்க மதிப்பு உள்ளது. மேலும் எனது குழு நிச்சயமாக இந்த முன்மொழிவை கவனத்தில் எடுத்து அதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை ஆராயும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் அனைவரும் என்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். இனிமையான நினைவுகளை மீண்டும் நினைத்து பார்ப்பதும், உங்கள் அனைவரின் முகங்களையும் மீண்டும் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருந்தது. பாரதத்துடனான உங்கள் உறவு தொடர்ந்து வலுவாக வளரும் என்று நான் மனதார நம்புகிறேன். எந்த வழியில் என்னால் உங்களுக்கு ஆதரவளிக்க முடியுமோ அதைச் செய்வோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நான் எப்போதும் உங்கள் அருகில் இருப்பேன்.
***
(Release ID: 2119619)
TS/IR/RR/KR
Cricket connect!
— Narendra Modi (@narendramodi) April 5, 2025
Delighted to interact with members of the 1996 Sri Lankan cricket team, which won the World Cup that year. This team captured the imagination of countless sports lovers! pic.twitter.com/2ZprMmOtz6
A wonderful conversation with members of the Sri Lankan cricket team that won the 1996 World Cup. Do watch… pic.twitter.com/3cOD0rBZjA
— Narendra Modi (@narendramodi) April 6, 2025