பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 1925ஆம் ஆண்டின் சீக்கிய குருத்வாராக்கள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வாரியத்திற்கான உறுப்பினர்கள் மற்றும் குழுக்களுக்கு வாக்களிப்பதில் சஹஜ்தாரி சீக்கியர்களுக்கு 1944ஆம் ஆண்டில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தின் மூலம் இந்தச் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள மத்திய உள்துறை முன்வைத்த முன்வரைவை பரிசீலித்தது.
இதன்படி, 08.10.2003 முதல் பின் தேதியிட்டு இந்த 1925ஆம் ஆண்டின் சீக்கிய குருதுவாராக்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது என்ற மத்திய உள்துறையின் முன்வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தத் திருத்தமானது 1966ஆம் ஆண்டின் பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தின் 72வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய உள்துறை அமைச்சகம் 08.10.2003 அன்று ஓர் அறிவிக்கையின் மூலம் வெளியிடப்பட்டது. எனினும், இந்த அறிவிக்கையை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் அதன் 20.12.2011 தேதிய உத்தரவின் மூலம் ரத்து செய்து, இவ்வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை பொருத்தமான, திறமையான சட்டமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
********