Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

17வது இந்திய – ஆசிய மெய்நிகர் மாநாட்டை ஒட்டி பிரதமரின் கருத்துகள்

17வது இந்திய – ஆசிய மெய்நிகர் மாநாட்டை ஒட்டி பிரதமரின் கருத்துகள்


நமஸ்தே,

மாண்புமிகு பிரதமர் நிகுயென் சுவோன் பூக் அவர்களே,

மதிப்புமிக்கவர்களே,

ஒவ்வொரு ஆண்டும் நடந்ததைப் போல, இப்போது நாம் கைகளைக் கோர்த்துக் கொண்டு குடும்பப் படம் எடுத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. இருந்தாலும், மெய்நிகர் வசதி மூலம் நாம் எல்லோரும் சந்தித்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலில், ஆசியான் அமைப்பின் இப்போதைய தலைமைப் பொறுப்பில் உள்ள வியட்நாம் நாட்டுக்கும், தாய்லாந்துக்கும், ஆசியானில் இப்போது இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருக்கும் நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கோவிட் பாதிப்பால் சிரமங்கள் உள்ள நிலையிலும், உங்கள் கடமைகளை நீங்கள் நன்றாகச் செய்திருக்கிறீர்கள்.

மதிப்புமிக்கவர்களே,

இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பின் முக்கியத்துவமான பங்களிப்புகள் நமது வரலாற்றுபூர்வமான, பூகோள ரீதியிலான மற்றும் கலாச்சார பாரம்பரியங்களின் அடிப்படையில் உருவானதாக உள்ளன. ஆரம்பத்தில் இருந்தே கிழக்கை நோக்கிய செயல்பாடு என்ற கொள்கையைக் கருத்தில் கொண்டதாக ஆசியான் அமைப்பு உள்ளது.

இந்தியாவுக்கும் ஆசியான் அமைப்புக்கும் இடையில்இயல்பு ரீதியில், பொருளாதார, சமூக, டிஜிட்டல், நிதி, கடல்சார் துறைகள் என அனைத்து வகையான இணைப்புகளையும் துரிதப்படுத்துவதற்கு இதில் நாங்கள்  உயர் முன்னுரிமை அளிக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளில் நாம் இந்தத் துறைகளில் மிகவும் நெருக்கமாகி உள்ளோம் இன்றைய சந்திப்பு, காணொலி மூலமாக நடந்தாலும்கூட, இது நமது வேறுபாடுகளை மேலும் களைவதற்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

இன்றைய கலந்தாடலுக்காக உங்கள் அனைவருக்கும் நான் மீண்டும் ஒரு முறை நன்றி கூறுகிறேன்.

——-