இந்திய வானிலை ஆய்வுத் துறை நமது தேசத்திற்கு ஆற்றி வரும் சிறப்பான சேவையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இத்துறை 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்திய வானிலை ஆய்வுத் துறை நமது தேசத்திற்கு ஆற்றிய மகத்தான சேவையின் 150 ஆண்டுகளை இன்று நாம் கொண்டாடுகிறோம். வானிலை முன்னறிவிப்பு முதல் காலநிலை ஆராய்ச்சியை மேம்படுத்துவது வரை, உயிர்களைப் பாதுகாப்பதிலும் சுற்றுச்சூழல் குறித்த நமது புரிதலை மேம்படுத்துவதிலும் இந்திய வானிலை ஆய்வுத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது”.
**********
ANU/ SMB/PKV/RR/KV
Today we mark 150 years of the India Meteorological Department’s exceptional service to our nation. From pioneering weather forecasting to advancing climate research, IMD has been instrumental in safeguarding lives and enhancing our understanding of the environment. @Indiametdept pic.twitter.com/T5oocR7DFU
— Narendra Modi (@narendramodi) January 15, 2024