Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்ட பின் மாணவர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்


12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்ட பின் மாணவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ள எனது இளம் நண்பர்கள்  அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த இளைஞர்களின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் மெச்சத்தக்கவை. மனிதகுலம் எதிர்கொண்ட மாபெரும் சவால்மிக்க காலத்தில் இவர்கள் தேர்வுகளுக்கு தயார் செய்து அவற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.”

“சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நமது இளம் தேர்வுப் போராளிகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உங்களின் உள்மனம் கூறுவதை பின்பற்றுமாறு அவர்களை நான் வலியுறுத்துகிறேன். எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ அதில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.”

“தங்களின் தேர்வு முடிவுகளில் சில மாணவர்களுக்கு மகிழ்ச்சி இல்லாதிருக்கலாம். ஆனால் ஒரு தேர்வு மட்டும் அவர்கள் யார் என்பதை ஒருபோதும் தீர்மானிப்பதில்லை என்பதை அவர்கள் அறியவேண்டும். வரும் காலங்களில் அவர்கள் நிச்சயம் பல வெற்றிகளை அடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.  தேர்வு  தொடர்பாக  நாம் விவாதித்த இந்த ஆண்டின் தேர்வு குறித்த விவாதத்தின் அம்சங்களையும் பகிர்ந்துள்ளேன்.”

***************

(Release ID: 1843774)