ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற குல்வீர் சிங்குக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற நமது தனித்துவமான தடகள வீரர் குல்வீர் சிங்குக்குப் பாராட்டுக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறேன். அவரது உறுதி நிச்சயம் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.”
***
(Release ID: 1962485)