Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்து வரலாற்று சாதனை படைத்ததற்கு பிரதமர் பாராட்டு


1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி என்ற இந்தியாவின் வரலாற்றுச் சாதனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தற்சார்பு இந்தியா ஆகியவற்றில்  இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அவர் எடுத்துரைத்தார்.

இந்தச் சாதனையைப் பாராட்டியுள்ள திரு மோடி, இது “இந்தியாவுக்கு பெருமையான தருணம்” என்றும், நிலக்கரி துறையைச் சார்ந்த பணியாளர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி வெளியிட்டுள்ள ஊடக எக்ஸ் தளப்பதிவில் இந்தியா 1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்து  சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சரின் ஊடக எக்ஸ் தளப்பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு மோடி;

இந்தியாவுக்கு இது பெருமையான தருணம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி என்ற மகத்தான சாதனையை படைக்கப்பட்டிருப்பதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.  எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தற்சார்பு இந்தியா  ஆகியவற்றுக்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள துறை சார்ந்த பணியாளர்கள் அனைவரின்  அர்ப்பணிப்பு   மற்றும் கடின உழைப்பை  பிரதிபலிப்பதாக உள்ளது என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

***

(Release ID: 2113567)

TS/SV/AG/RR