ஹெமிஸ்பியர் பிராப்பர்ட்டீஸ் இந்தியா நிறுவனத்தின் (எச்பிஐஎல்) நிர்வாக கட்டுப்பாட்டை தொலைத்தொடர்பு துறையிலிருந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு மாற்றித்தரும் திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. இந்த நிறுவனத்தில் ரூ.700 கோடி பங்குகளையும் மற்றும் ரூ.51 கோடி பாதுகாப்புடன் கூடிய இந்திய அரசின் கடனையும் இணைத்தபிறகு இந்த நிர்வாக கட்டுப்பாட்டு மாற்றத்தை செய்வது என்ற திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. உபரி நிலத்தை பிரிக்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விபரங்கள் :
பயன்கள் :
டாடா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (டிசிஎல்) உபரி நிலங்களை பிரித்து எச்பிஐஎல் நிறுவனத்திற்கு வழங்கி அதன் செயல்பாட்டை மேலும் எளிமையானதாக செய்தல்.
அமலாக்க அணுகுமுறை மற்றும் இலக்குகள் :
அமைச்சரவையின் ஒப்புதல் இந்த்த் திட்டத்திற்கு கிடைத்தவுடன் டிசிஎல் நிறுவனத்தின் உபரி நிலத்தை எச்பிஐஎல் நிறுவனத்திற்கு முத்திரைத் தீர்வையை செலுத்தி மாற்றித்தரப்படும். டிசிஎல் நிறுவனம் அறிவித்தபடி 7 முதல் 8 மாதங்களுக்குள் ஏற்பாட்டு திட்ட அனுமதி தேவைப்படும். இந்த காலத்திற்குள் தேசிய கம்பெனி சட்ட நடுவர் மன்ற அனுமதி கிடைத்தபிறகு 4 அல்லது 5 மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் அமலாக்கப்படும். மொத்தத்தில் இந்த முடிவை செயல்படுத்த சுமார் ஓராண்டு காலம் பிடிக்கும்.
பின்னணி :
விதேஷ் சஞ்சார் நிகம் (தற்போது டாடா தொலைத்தொடர்பு நிறுவனம்) மத்திய அரசினால் 2002 பிப்ரவரி 13ம் தேதி பங்கு விற்பனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் மேலாண்மை கட்டுப்பாடு முக்கிய பங்காளியான டாடா குழுமத்தின் சிறப்பு நோக்க நிதியமான பானாடோன் பின்வெஸ்ட் நிறுவனத்திற்கு மாற்றித்தரப்பட்டது.
பங்கு விற்பனையின்போது புனே, கொல்கத்தா, புதுதில்லி, சென்னை ஆகிய நகரங்களில் 5 இடங்களில் உள்ள 773.13 ஏக்கர் நிலம் உபரி என காணப்பட்டு வரையறை செய்யப்பட்டு பங்கு விற்பனை திட்டத்தில் சேர்க்கப்படமாட்டாது என முடிவு செய்யப்பட்டது.
பங்கு உரிமை / பங்கு கொள்முதல் உடன்பாட்டின்படி பானாடோன் பின்வெஸ்ட் நிறுவனம் உபரி நிலத்தை பிரித்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இந்த நிலம் 1956 கம்பெனிகள் சட்டத்தின் 391 முதல் 394 வரையிலான பிரிவுகளின்படி வீடு நிலம் கம்பெனியாக மாற்றப்பட்டது.