Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹுஸ்டனில், செப்டம்பர் 22-ல் நடைபெறவுள்ள இந்திய சமுதாயத்தினரின் நிகழ்ச்சியில் டொனால்டு ஜே. ட்ரம்ப் பங்கேற்பதற்கு பிரதமர் வரவேற்பு


டெக்சாஸில் உள்ள ஹுஸ்டனில், செப்டம்பர் 22-ல் நடைபெறவுள்ள இந்திய சமுதாயத்தினரின் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர்  டொனால்டு ஜே. ட்ரம்ப் பங்கேற்கும் செய்தி, மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது, இந்தியா – அமெரிக்கா இடையேயான சிறப்புமிக்க நட்புறவை எடுத்துரைப்பதாக பிரதமர்  கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்பது, சிறப்புவாய்ந்த ஒரு நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், இது இந்தியா – அமெரிக்கா இடையிலான இருதரப்பு நட்புறவின் வலிமையை பறைசாற்றுவதுடன், அமெரிக்க சமுதாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் இந்திய சமுதாயத்தினர் வழங்கி வரும் பங்களிப்பிற்கான அங்கீகாரம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Narendra Modi

✔@narendramodi

 

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்கும் சிறப்பு நிகழ்வு, இந்தியா-அமெரிக்கா சிறப்பு நட்புறவை எடுத்துக்காட்டுகிறது.

ஹுஸ்டனில் 22-ஆம் தேதியன்று நடைபெறும் சமுதாய நிகழ்ச்சியில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்பது மிக்க மகிழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளி சமுதாயத்தினருடன் இணைந்து அவரை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 

Narendra Modi

✔@narendramodi

 

 ஒரு சிறப்பு நிகழ்வாக அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஹுஸ்டனில் நம்முடன் இணைவது, இருதரப்பு நட்புறவின் வலிமையை பறைசாற்றுவதுடன், அமெரிக்க சமுதாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் இந்திய சமுதாயத்தினர் வழங்கி வரும் பங்களிப்பிற்கான அங்கீகாரம்.

 

 

முன்னதாக இன்று, வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், டொனால்டு ட்ரம்ப் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள அந்த செய்திக்குறிப்பு, “அமெரிக்கா மற்றும் இந்திய மக்களிடையேயான வலிமையான உறவை எடுத்துரைப்பதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றும், உலகின் மிகப் பழமையான, மிகப் பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நீடித்த நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, எரிசக்தி மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலமா மோடி – பகிர்ந்து கொண்ட கனவுகள், ஒளிமயமான எதிர்காலம்’ என்ற நிகழ்ச்சி, டெக்சாஸ் இந்திய அமைப்பினரால் பிரதமர் நரேந்திர மோடிக்காக, ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 22-அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹுஸ்டனில் உள்ள என்ஆர்ஜி விளையாட்டரங்கில் நடத்தப்படும் மாபெரும் சமுதாய நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.