Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹரியானா மாநிலம் பானிபட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

ஹரியானா மாநிலம் பானிபட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை


பாரத் மாதா கீ ஜெய்!

பாரத் மாதா கீ ஜெய்!

பாரத் மாதா கீ ஜெய்!

ஹரியின் இருப்பிடம் ஹரியானா, இங்கே, உள்ள அனைவரும் ராம் ராம்என ஒருவருக்கொருவர் மனமார வாழ்த்திக் கொள்கின்றனர்.

ஹரியானா மாநில ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா அவர்களே, முதலமைச்சர் திரு நயப் சிங் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திருமதி நிர்மலா சீதாராமன், திருமனோகர் லால் அவர்களே; கிருஷ்ண பால் அவர்களே, ஹரியானா மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, எல்.ஐ.சி நிறுவனத்தின் பணியாளர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே.

இன்று, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை குறிக்காளாக கொண்டு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நாள் வேறு பல காரணங்களுக்காகவும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். நவராத்திரி பண்டிகையின் போது, ஒன்பது நாட்கள் சக்தியின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கிறோம். இந்த நாளும் பெண்களை கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இதே நாளில், டிசம்பர் 9-ம் தேதியன்று அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகளை கொண்டாடும் இந்த வேளையில், சமத்துவம், உள்ளடக்கிய வளர்ச்சிக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான நினைவூட்டலாக அமைந்துள்ளது.

நண்பர்களே,

 

வாழ்வின் நெறிமுறைகள், மதம் குறித்த ஆழ்ந்த அறிவை உலகிற்கு வழங்கிய இந்த பூமியில் சர்வதேச கீதா ஜெயந்தி மஹோத்சவமும் தற்போது குருக்ஷேத்ரா நகரில் நடைபெற்று வருகிறது. ஹரியானா மாநிலத்தில் வசிக்கும் நாட்டுப்பற்று கொண்ட மக்களுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒன்றாக இருந்தால், நாம் பாதுகாப்பாக இருப்போம்என்ற மந்திரத்தை ஹரியானா மாநில மக்கள் ஏற்றுக்கொண்ட விதம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

நண்பர்களே,

நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் மகள்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில்  பீமா சகி திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. பீமா சகி திட்டத்தின் கீழ் மகள்களுக்கு சான்றிதழ்கள் இங்கு வழங்கப்பட்டன. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பெண்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

சில ஆண்டுகளுக்கு முன்பு, பானிபட்டில் இருந்து பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்என்ற இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் கவுரவம் எனக்கு கிடைத்தது. இதன் பலன் நாடு முழுவதிலும் உணரப்பட்டது.  இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கான பீமா சகி திட்டம் இதே பானிபட் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளில், அங்குள்ள பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அடையாளமாக மாறியுள்ளது.

நண்பர்களே,

ஒரு காலத்தில் பெண்கள் வங்கி மற்றும் காப்பீடு  தொடர்பான நடவடிக்கைகளிலிருந்து விலகியே இருந்த நிலையில், இன்று லட்சக்கணக்கான பெண் காப்பீட்டுத் துறையில் முகவர்களாக அல்லது பீமா தோழிகளை உருவாக்கும் இயக்கமாக தொடங்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையின் விரிவாக்கத்திற்கும் வழிவகுக்கும் இத்திட்டத்தின் கீழ்,  2 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுவதுடன் மூன்று ஆண்டுகளுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்களும் வழங்கப்படும்.

நண்பர்களே,

இன்று, உங்கள் அனைவருக்கும், குறிப்பாக ஹரியானாவின் சகோதரிகளுக்கு, இந்த மாநிலம் விரைவான வளர்ச்சியைக் காணும் என்று நான் மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன். இரட்டை என்ஜின் அரசு, அதன் மூன்றாவது பதவிக்காலத்தில், மூன்று மடங்கு வேகத்துடன் செயல்படும். பெண்களுக்கு அதிகாரமளித்தலின் வாயிலாக அவர்களது பொருளாதார வளர்ச்சியும் விரிவடையும். உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் எப்போதும் எங்களுடன் இருக்கட்டும். இந்த நம்பிக்கையுடன், மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடன் சொல்லுங்கள் –

பாரத் மாதா கீ ஜெய்!

பாரத் மாதா கீ ஜெய்!

பாரத் மாதா கீ ஜெய்!

மிகவும் நன்றி!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

——

(Release ID: 2082396

TS/SV/KPG/KR