Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹசன் ஆலம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஹசன் ஆலம் உடன் பிரதமர் சந்திப்பு

ஹசன் ஆலம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஹசன் ஆலம் உடன் பிரதமர் சந்திப்பு


மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பகுதிகளில் செயல்படும் மிகப்பெரிய எகிப்திய நிறுவனங்களில் ஒன்றான ஹசன் ஆலம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஹசன் ஆலம்-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஜூன் 2023 அன்று கெய்ரோவில் சந்தித்தார்.

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் துறைகளில் இந்திய நிறுவனங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

 

***

AD/PLM/DL