Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்வீடன் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

ஸ்வீடன் பிரதமருடன் பிரதமர்  சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திரு.  உல்ஃப் கிறிஸ்டர்சனுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். 2023, 1 டிசம்பர் அன்று, துபாயில் நடந்த சிஓபி 28 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு  வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் பருவநிலை ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து தலைவர்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபட்டனர். ஐரோப்பிய ஒன்றியம், நோர்டிக் கவுன்சில் மற்றும் நோர்டிக் பால்டிக் 8 குழு உள்ளிட்ட பிராந்திய மற்றும் பலதரப்பு பிரச்சினைகள் குறித்தும்  அவர்கள் கலந்துரையாடினர். .

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் ஸ்வீடனின் வெற்றிகரமான தலைமைத்துவத்துக்கு பிரதமர் கிறிஸ்டெர்சனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

*******

ANU/AD/BS/DL