குஜராத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைகள் தீர்ப்பதற்கு மாநிலம் முழுவதும் கவனம் செலுத்துவது (ஸ்வாகத்) என்ற முன்முயற்சியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் உரையாற்றினார். இந்த முன்முயற்சியின் வெற்றிகரமான 20 ஆண்டுகள் பூர்த்தியடைவதை குஜராத் அரசு கொண்டாடுகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது திட்டத்தின் கடந்தகால பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர், ஸ்வாகத் தொடங்கப்பட்டதன் நோக்கம் வெற்றிகரமாக எட்டப்பட்டிருப்பதற்கு திருப்தி தெரிவித்தார். இதன் மூலம் குடிமக்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனைகளையும் எழுப்பியுள்ளனர். அரசின் அணுகுமுறை என்பது நட்புரீதியாக இருக்க வேண்டும், அரசில் இருப்பவர்களுடன் தங்களின் பிரச்சனைகளை சாமானிய மக்களும் எளிதில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். குடிமக்களின் முயற்சியும், அர்ப்பணிப்பும் தான் ஸ்வாகத் முன்முயற்சியை மாபெரும் வெற்றியடையச் செய்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், இதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
2003-ம் ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போது, நான் மிகவும் வயது முதிர்ந்த முதலமைச்சராக இருக்கவில்லை என்பதையும், அனைவரையும் மாற்றுகின்ற அதிகாரத்தின் பொதுவான கட்டுப்பாடுகளைத் தாம் அவரும் எதிர்கொண்டதையும் நினைவுகூர்ந்தார். பதவியேற்பதால் மாறிவிடக்கூடாது என்பதில் தாம் தெளிவாக இருந்ததாகவும் அவர் கூறினார். “பதவியின் கட்டுப்பாடுகளுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். நான் மக்களிடையே இருந்தேன், மக்களுக்காக இருப்பேன்” என்று பிரதமர் தெரிவித்தார். இந்த உறுதியான முடிவால்தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைகளைத் தீர்ப்பதற்கு மாநிலம் முழுவதும் கவனம் செலுத்துவது (ஸ்வாகத்) என்ற திட்டம் பிறந்தது. “வாழ்க்கையை எளிதாக்குதல், நிர்வாகத்தைப் பரவலாக்குதல் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக ஸ்வாகத் உள்ளது” என்று அவர் கூறினார்.
நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, குஜராத் மாநிலத்தின் சிறந்த நிர்வாகம், உலகில் சுய அடையாளத்தை பெற்றதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். மின்னணு- வெளிப்படைத்தன்மை, மின்னணு – பொறுப்புடைமையாக ஸ்வாகத் மூலம், சிறந்த நிர்வாகத்திற்கு சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு முன்னுதாரணமாக விளங்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஐநாவில் ஸ்வாகத் மிகுந்த பாராட்டைப் பெற்று பொதுச் சேவைக்கான மதிப்புமிக்க விருதை பெற்றதாகவும் அவர் கூறினார். 2011-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, ஸ்வாகத் மூலமான சிறந்த நிர்வாகத்திற்காக குஜராத் அரசு மத்திய அரசின் தங்கப்பதக்க விருதை பெற்றதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
ஸ்வாகத் மூலம் குஜராத் மக்களுக்கு தாங்கள் சேவை செய்ய முடிந்தது, தனக்கான மிகப்பெரிய விருது என்று பிரதமர் கூறினார். ஸ்வாகத் முறையில் செயல்முறை திட்டத்தை தாங்கள் தயாரித்ததாக அவர் தெரிவித்தார். ஸ்வாகத் முறையின் கீழ், வட்டார மற்றும் வட்ட அளவில் பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டதாக அவர் கூறினார். அதன் பிறகு மாவட்ட அளவில் அதற்கு மாவட்ட ஆட்சியர் பொறுப்புடையவராக நியமிக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார். மாநில அளவில் தாம் பொறுப்பேற்றுக்கொண்டதாக பிரதமர் தெரிவித்தார். திட்ட அமலாக்க முகமைகள் – கடைக்கோடி பயனாளிகள் ஆகியோருக்கு இடையேயான தொடர்பு, அவர்களுக்கான முன்னெடுப்புகள் மற்றும் திட்டங்களை சென்றடைய செய்தல், அவற்றின் தாக்கம் ஆகியவற்றை அறிந்து கொண்டு உதவி புரிதல் சிறந்த ஒன்று என்று அவர் கூறினார். ஸ்வாகத் முறை குடிமக்களுக்கு அதிகாரமளித்து நம்பகத் தன்மையை அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
வாரம் ஒருமுறை மட்டுமே ஸ்வாகத் நிகழ்ச்சி நடைபெற்றாலும், நூற்றுக்கணக்கான குறைதீர்ப்புகளுக்காக அது தொடர்பான பணிகள் மாதந்தோறும் நடைபெற்றதாக பிரதமர் கூறினார். எந்த குறிப்பிட்டத் துறைகளில், அதிகாரிகள் அல்லது பிராந்தியங்களில் மற்றவைகளை விட, அதிகளவு புகார்கள் வருவது குறித்து தாம் பகுப்பாய்வு செய்ததாக அவர் தெரிவித்தார். அது குறித்து ஆழ்ந்து, ஆராய்ந்து தேவைப்பட்டால், அதுகுறித்த கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய மோடி, இது சாதாரண மக்களிடையே நம்பக தன்மையை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். சமூகத்தில் சிறந்த நிர்வாகத்தின் அளவீடு என்பது பொதுமக்கள் குறைதீர்ப்பு முறையில் தரத்தை சார்ந்துள்ளதாகவும் இதுவே ஜனநாயகத்தின் உண்மையான சோதனை என்று அவர் தெரிவித்தார்.
ஸ்வாகத் முறை அரசின் பழைய கருத்துக்களை மாற்றியமைத்ததாக பிரதமர் கூறினார். நிர்வாகம் என்பது பழைய விதிகள் மற்றும் சட்டங்கள் என்றில்லாமல், புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய சிந்தனைகளை தாங்கள் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார். 2003-ம் ஆண்டை நினைவு கூர்ந்த திரு மோடி, மின்னணு நிர்வாகத்திற்கு அப்போதைய அரசு அதிக முன்னுரிமை அளிக்கவில்லை என்று கூறினார். காகித முறைகள் மற்றும் கோப்புகளால் மிகவும் தாமதம் ஏற்பட்டதாகவும், காணொலிக்காட்சி குறித்து அறியப்படாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, எதிர்கால சிந்தனைகளின் அடிப்படையில் குஜராத் அரசு பணியாற்றியதாக அவர் கூறினார். இன்று ஸ்வாகத் போன்ற முறைகள் நிர்வாகத்திற்கு பல தீர்வுகளை வழங்குவதற்கான உத்வேகத்தை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு மாநிலங்கள் இந்த முறையின் அடிப்படையில் செயல்படுவதாக அவர் கூறினார். மத்தியிலும், அரசின் செயல்பாடுகள் குறித்து மறு சீராய்வு செய்வதற்காக பிரகதி என்ற முறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு பிரகதி மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியதாக அவர் கூறினார். இது ஸ்வாகத் சிந்தனை அடிப்படையிலான கருத்துடையது என்று அவர் தெரிவித்தார். பிரகதி மூலம் 16லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்து தாம், மறுசீராய்வு செய்துள்ளதாகவும், அதன் காரணமாக பல்வேறு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.
முந்தையை அரசுகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடும் போது ஸ்வாகத் பெருமளவில் நம்பிக்கை அளித்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், ஆட்சிக்கு தேவையான ஆயிரக்கணக்கான புத்தாக்க முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்று கூறினார். இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் அரசின் முன்னெடுப்புகள் புது வாழ்க்கைக்கு புத்துயிர் ஊட்டும் விதத்தில் அமையும் என்றார். இதே திட்டம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, மக்களை மையப்படுத்திய அரசாங்கத்திற்கு சிறந்த முன்உதாரணமாக மாறும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.
பின்னணி
தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி குறைதீர்ப்பதற்காக மாநிலம் வாரியாக கவனம் ஈர்த்தல் என்பதே ஸ்வாகத் ஆகும். கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி ஆட்சி இருந்த காலத்தில் தொடங்கப்பட்டது. மாநில மக்களின் குறையை தீர்க்க வேண்டியது முதலமைச்சராக இருப்பவரின் அதிமுக்கிய கடமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் வாழ்வை எளிதாக மாற்றுவதற்காக முதலமைச்சர் மோடி, தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட குறைதீர்ப்பு நிகழ்ச்சியை முதல் முறையாக அறிமுகப்படுத்தினார்.
குடிமக்களையும், அரசாங்கத்தையும் இணைக்கும் பாலாமாக செயல்படும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களின் பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் விரைந்து தீர்வுகாண வேண்டும் என்பதாகும். அதே நேரத்தில் பல காலக்கட்டத்தில் மக்களின் வாழ்க்கையை வெளிப்படையாக மாற்றியதுடன், காகிதம் இல்லா வகையில், ஒளிவுமறைவற்ற முறையில், கூட்ட நெரிசலில் சிக்காத வகையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவியது.
பொது மக்களின் குறைகளை நேரடியாக முதலமைச்சரிடம் கொண்டு செல்வதற்கு அடித்தளம் அமைத்து கொடுப்பதே ஸ்வாகத்தின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு மாதமும் 4 ஆவது வியாழக்கிழமையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் நேரடியாக குடிமக்களிடம் குறைதீர்ப்பு மனுக்கள் குறித்து கலந்துரையாடுவார். இதில் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றப்படும். 99 சதவீத மனுக்களுக்கு சமர்பித்த உடனேயே தீர்வு காணப்படும்.
ஸ்வாகத் இணையதள திட்டத்தின் நான்கு பிரிவுகள் உள்ளன. அவை மாநில, மாவட்ட, வட்ட மற்றும் கிராம ஸ்வாகத் ஆகும். மாநில ஸ்வாகத் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்துகொண்டு பொதுமக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார்.
ஸ்வாகத் இணையதள நிகழ்ச்சியின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பொது சேவையைப் பாராட்டி, கடந்த 2010-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது சேவை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
*****
(Release ID: 1920262)
AP/SMB/IR/ES/RJ/RS/MA/KRS
The SWAGAT initiative in Gujarat demonstrates how technology can be efficiently used to resolve people's grievances. https://t.co/eBJwNGVzkB
— Narendra Modi (@narendramodi) April 27, 2023
The uniqueness of SWAGAT initiative in Gujarat is that it embraces technology to address people's grievances. pic.twitter.com/ZYE5XWpcdR
— PMO India (@PMOIndia) April 27, 2023
The SWAGAT initiative ensured prompt resolution of the grievances of people. pic.twitter.com/XypkYVUF7o
— PMO India (@PMOIndia) April 27, 2023
Governance happens through innovations, new ideas. pic.twitter.com/r1LRmEpz9x
— PMO India (@PMOIndia) April 27, 2023