Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை அமைப்பது பற்றி பிரதமர் அறிவித்தார்


உச்சநீதிமன்ற உத்தரவின்படி அயோத்யாவில் ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வையிடுவதற்கான அறக்கட்டளை பற்றி பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

“உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ‘ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை அமைப்பதற்கான யோசனைக்கு எனது அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. அயோத்தியாவில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து முடிவுகளையும் சுயேச்சையான இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும்” என்று பிரதமர் கூறினார்.

ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையில் அமைப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

அயோத்தியாவில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து முடிவுகளையும் சுயேச்சையான இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும்: பிரதமர் @narendramodi

அயோத்தியா குறித்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் அடிப்படையிலான முடிவு

மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உ.பி. அரசிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது என்றும், அம் மாநில அரசு இதனை ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

இந்திய நெறிகள், உணர்வு, சிந்தனைகள், கலாச்சாரம் ஆகியவற்றில் பகவான் ராமருக்கும், அயோத்திக்கும் உள்ள வரலாற்றுப் பூர்வமான ஆன்மீக ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த பிணைப்பை நாம் அனைவரும் அறிவோம்.

“பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுமானத்தையும், எதிர்காலத்தில் ராம் லல்லாவுக்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் உணர்வையும் மனதில் கொண்டு அரசு மற்றொரு முக்கிய முடிவையும் எடுத்துள்ளது. ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள சுமார் 67.703 ஏக்கர் நிலத்தையும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு மாற்றுவது என அரசு முடிவு செய்துள்ளது” என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்திய மக்கள் வெளிப்படுத்திய பக்குவத்தை பிரதமர் பாராட்டினார்

அயோத்யா விஷயத்தில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் முடிவைத் தொடர்ந்து அமைதியையும், நல்லிணக்கத்தையும் பராமரிக்க மக்கள் வெளிப்படுத்திய பக்குவத்தைப் பிரதமர் பாராட்டினார்.

அயோத்யா விஷயத்தில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் முடிவை தொடர்ந்து அமைதியையும், நல்லிணக்கத்தையும் பராமரிக்க மக்கள் வெளிப்படுத்திய பக்குவத்தை பிரதமர் பாராட்டினார். @narendramodi

“ஜனநாயக நடைமுறைகளிலும், விதிமுறைகளிலும் இந்திய மக்கள் சிறப்புமிக்க நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவின் 130 கோடி மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்” என்று தனியான டுவிட்டர் செய்தியிலும் அவர் அதை வலியுறுத்தி உள்ளார்.

ராம் ஜென்ம பூமி விஷயத்தில் தீர்ப்பு வெளியான பின் ஜனநாயக நடைமுறைகளிலும், விதிமுறைகளிலும் இந்திய மக்கள் சிறப்புமிக்க நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவின் 130 கோடி மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன் @narendramodi

இந்தியாவில் வாழும் அனைத்து சமூகத்தினரும் பெரியதொரு குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆவர்

நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இதுவே இந்தியாவின் நெறியாகும். இந்தியர் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை நாம் விரும்புகிறோம். ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரையும் அரவணைப்போம்’ என்பதால் வழிகாட்டப்பட்டு ஒவ்வொரு இந்தியரின் நல் வாழ்வுக்காகவும் நாம் பணியாற்றி வருகிறோம்.

நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இதுவே இந்தியாவின் நெறியாகும். இந்தியர் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை நாம் விரும்புகிறோம்.

‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரையும் அரவணைப்போம்’ என்பதால் வழிகாட்டப்பட்டு ஒவ்வொரு இந்தியரின் நல் வாழ்வுக்காகவும் நாம் பணியாற்றி வருகிறோம். @narendramodi

“பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான பணியில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்று பிரதமர் கூறினார்.

******