Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ மன்னத்து பத்மநாபன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்


ஸ்ரீ மன்னத்து பத்மநாபன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரை நினைவு கூர்ந்தார். சமுதாயத்தை மேம்படுத்தவும், மகளிருக்கு அதிகாரம் அளிக்கவும், மனித சமுதாயத்தின் துயரங்களைக் களையவும் அயராது பாடுபட்ட உண்மையான தொலைநோக்குப் பார்வை கொண்டவர் அவர் என்று திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

“ஸ்ரீ மன்னத்து பத்மநாபனின் பிறந்த தினத்தையொட்டி அவரை நினைவு கூர்கிறேன். சமுதாயத்தை மேம்படுத்தவும், மகளிருக்கு அதிகாரம் அளிக்கவும், மனித சமுதாயத்தின் துயரங்களைக் களையவும் அயராது பாடுபட்ட உண்மையான தொலைநோக்கு பார்வை கொண்டவர் அவர். கல்வி மற்றும் கற்றலுக்கு அவர் அளித்த முக்கியத்துவமும் குறிப்பிடத்தக்கது.  நமது நாட்டிற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் உறுதிபூண்டுள்ளோம்.

—-

TS/IR/KPG/DL