பாலாசாகேப் தாக்கரேயின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் மராத்தி மக்களின் அதிகாரமளித்தலுக்காக பாடுபட்ட ஒரு தொலைநோக்கு பார்வையாளராக ஸ்ரீ தாக்கரே திகழ்ந்ததாக திரு மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“மகத்தான தலைவரான பாலாசாகேப் தாக்கரே ஜியின் நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் மராத்தி மக்களின் அதிகாரமளித்தலுக்காக போராடிய ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர். இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் பெருமையை மேம்படுத்துவதில் அவர் உறுதியாக இருந்தார். அவரது துணிச்சலான குரல், தளராத உறுதி ஆகியவை தொடர்ந்து வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்’’
***
PKV/DL
I pay homage to the great Balasaheb Thackeray Ji on his Punya Tithi. He was a visionary who championed the cause of Maharashtra’s development and the empowerment of Marathi people. He was a firm believer in enhancing the pride of Indian culture and ethos. His bold voice and…
— Narendra Modi (@narendramodi) November 17, 2024
महान बाळासाहेब ठाकरे जी यांच्या पुण्यतिथीनिमित्त मी त्यांना आदरांजली अर्पण करतो. महाराष्ट्राचा विकास आणि मराठी लोकांच्या सक्षमता यासाठी आग्रही असे ते एक द्रष्टे व्यक्तिमत्व होते. भारतीय संस्कृती आणि मूल्यांचे संवर्धन करून त्याविषयीचा अभिमान वृद्धिंगत करण्यावर त्यांचा दृढ…
— Narendra Modi (@narendramodi) November 17, 2024