Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்


ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு :

“ஞானம் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் அடையாளமாகத் திகழும்  ஸ்ரீ நாராயண குருவின் ஜெயந்தி தினத்தில் அவரை நினைவுகூர்கிறேன். அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் போராடிய அவர், தனது அறிவாற்றலால் சமூகத்தை மாற்றி அமைத்தார். சமூக நீதி மற்றும் ஒற்றுமைக்காக  அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவரது செயல்பாடுகளால் நாம் ஈர்க்கப்பட்டுள்ளோம். சிவகிரி மடத்திற்கு, முன்பு ஒருமுறை நான் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்கிறேன்.”

***

ANU/SM/BR/KPG