Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ குரு தேஜ் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாளையொட்டி 21-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு


ஸ்ரீ குரு தேஜ் பகதூர் அவர்களின்  400-வது பிறந்த நாளையொட்டி 21-ம் தேதி இரவு 9.15 மணிக்கு டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதுடன், நினைவு நாணயம் மற்றும் தபால் தலையையும் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியை இந்திய அரசு தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு நாள் (ஏப்ரல் 20 மற்றும் 21) நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாடகர்களும் குழந்தைகளும் ‘ஷாபாத் கீர்த்தனையில்’ பங்கேற்பார்கள். குரு தேஜ் பகதூர் அவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பிரமாண்ட ஒளி – ஒலி கண்காட்சி நிகழ்ச்சியும் நடைபெறும். இது தவிர சீக்கியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான ‘கட்கா’வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேஜ் பகதூரின் போதனைகளை எடுத்துரைப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும். உலக வரலாற்றில் மதம் மற்றும் மனித தன்மைகள், இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காக உயிரை தியாகம் செய்தவர் இவர். முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் காஷ்மீரி பண்டிட்டுகளின் மத சுதந்திரத்தை ஆதரித்ததற்காக அவர் தூக்கிலிடப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24 அன்று அவரது நினைவு தினம் ‘ஷஹீதி திவஸ்’ என்று நினைவுகூரப்படுகிறது. தில்லியில் உள்ள குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப் மற்றும் உள்ள குருத்வாரா ரகாப் கஞ்ச் ஆகியவை அவரது புனித தியாகத்துடன் தொடர்புடையவை. அவரது மரபு தேசத்தை ஒருங்கிணைக்கும் பெரும் சக்தியாக விளங்குகிறது.

***************

 

(Release ID: 1818241)