Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீஸ்ரீ ஹரிசந்த் தாக்கூர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை


ஸ்ரீஸ்ரீ ஹரிசந்த் தாக்கூர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். விளிம்புநிலை மக்களை மேம்படுத்துவதற்கும், சமத்துவம், கருணை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும் ஸ்ரீ தாக்கூர் ஆற்றிய பணிகளைப் பாராட்டியுள்ள திரு மோடி, மாத்துவா தர்ம மகா மேளா 2025-க்கு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது:

“ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். சேவை மற்றும் ஆன்மீகத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவத்தால் எண்ணற்ற மக்களின் இதயங்களில் அவர் வாழ்கிறார். விளிம்புநிலை மக்களை மேம்படுத்துவதற்கும், சமத்துவம், இரக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். மேற்கு வங்கத்தின் தாகூர் நகருக்கும், வங்கதேசத்தில் உள்ள ஒரகண்டிக்கும் சென்றதை நான் ஒருபோதும் மறக்க முடியாது. அங்கு அவருக்கு மரியாதை செலுத்தினேன்.

புகழ்பெற்ற மாத்துவா சமூக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் மாத்துவா தர்ம மகா மேளா 2025  -க்கு எனது நல்வாழ்த்துக்கள். மாதுவா சமூகத்தின் நலனுக்காக எங்கள் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் வரும் காலங்களில் அவர்களின் நல்வாழ்வுக்காக நாங்கள் அயராது உழைப்போம். “ஹரியின் பெயரை உச்சரித்து மகிழ்வோம்(ஜாய் ஹரிபோல்)”

***

Release ID: (2115676)

TS/PKV/SG/KR