Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் பற்றி 21 அறிஞர்களின் வர்ணனைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதியை வெளியிட்டார் பிரதமர்

ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் பற்றி 21 அறிஞர்களின் வர்ணனைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதியை வெளியிட்டார் பிரதமர்


ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் பற்றி 21 அறிஞர்களின் வர்ணனைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதியை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டார்.  

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் ஜம்மு காஷ்மீரின் தர்மார்த் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கரண் சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்திய தத்துவம் பற்றி டாக்டர் கரண் சிங் செய்த பணியை பாராட்டினார்.  அவரது முயற்சி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் அடையாளத்தை புதுப்பித்துள்ளது என்றும் இது பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் சிந்தனை பாரம்பரியத்தை வழிநடத்தியுள்ளது என்றும் பிரதமர் கூறினார். 

கீதையை ஆழ்ந்து படிக்க ஆயிரக்கணக்கான அறிஞர்கள் தங்களின் முழு வாழ்வையும் அர்ப்பணித்துள்ளனர் என்றும்இதை ஒரு வேதத்தின் ஒவ்வொரு வசனத்திலும் வெவ்வேறு விளக்கங்களின் பகுப்பாய்வு மற்றும் பல விசித்திரமான விஷயங்களின் வெளிப்பாடு ஆகியவற்றில் இதை தெளிவாகக் காண முடியும் என்றும் அவர் கூறினார். 

 இது இந்தியாவின் கருத்து  சுதந்திரம் மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளம் என்றும்இது ஒவ்வொரு நபருக்கும் தனது சொந்த கருத்தை வைத்திருக்க தூண்டுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவை ஒன்றிணைத்த ஆதி சங்கராச்சாரியா, கீதையை ஒரு ஆன்மீக உணர்வாக பார்த்தார் என பிரதமர் கூறினார். ராமானுஜ ஆச்சார்யா போன்ற முனிவர்கள்கீதையை ஆன்மீக அறிவின்மை வெளிப்பாடாக முன்வைத்திருந்தனர். 

சுவாமி விவேகானந்தருக்கு பகவத் கீதை, தளராத ஊக்கம் அளிப்பதாகவும்அதிக நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்துள்ளது. ஸ்ரீ அரபிந்தோவுக்கு கீதை, அறிவு மற்றும் மனிதகுலத்தின் உண்மையான உருவகமாக இருந்தது. 

மகாத்மா காந்திக்கு, பல சிக்கனலான நேரங்களில் கீதை வழிகாட்டியாக இருந்தது.  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தேசபக்தி மற்றும் வீரத்துக்கு ஊக்கம் அளிப்பதாக கீதை இருந்திருக்கிறது.

சுதந்திர போராட்டத்துக்கு புதிய பலம் அளித்ததும் இந்த கீதைதான் என பால காங்காதார திலகர் கூறினார்.

நமது ஜனநாயகம் நமக்கு சிந்தனை சுதந்திரத்தையும், பணி சுதந்திரம், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் சம உரிமை ஆகியவற்றை அளிக்கிறது என பிரதமர் குறிப்பிட்டார். 

நமது அரசியல் சாசனத்தின் பாதுகாவலர்களாக இருக்கும் ஜனநாயக அமைப்புகளில் இருந்து இந்த சுதந்திரம் வருகிறது. ஆகையால், நமது உரிமைகளை பற்றி பேசும்போதெல்லாம், நமது ஜனநாயக கடமைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

ஒட்டு மொத்த உலகத்துக்கும், ஒவ்வொரு உயிரினத்துக்குமான புத்தகம் கீதை என பிரதமர் கூறினார்.

இது பல இந்திய மற்றும் சர்வதேச  மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டு உள்ளது, இது குறித்து பல நாடுகளில் சர்வதேச அறிஞர்களால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.  

தனது அறிவை பகிர்ந்து கொள்வது இந்தியாவின் பாரம்பரியம் என பிரதமர் கூறினார்.

கணிதம், ஜவுளிஉலோகம் மற்றும் ஆயுர்வேதா ஆகியவற்றில் நமது அறிவு மனிதநேய சொத்தாக கருதப்படுகிறது என அவர் கூறினார்.  ஒட்டு மொத்த உலகின் முன்னேற்றம் மற்றும் மனித நேய சேவைக்கு பங்களிப்பதில், இந்தியா இன்று மீண்டும் தனது ஆற்றலை வளர்த்து கொண்டிருக்கிறது. 

சமீபகாலமாக இந்தியாவின் பங்களிப்பை இந்த உலகம் பார்த்தது என அவர் குறிப்பிட்டார்.  தற்சார்பு இந்தியா முயற்சிகளில், இந்த பங்களிப்பு உலகத்துக்கு மிகப் பெரிய அளவில் உதவும் என பிரதமர்  கூறினார்.

***************