Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் பற்றி 21 அறிஞர்களின் வர்ணனைகள் அடங்கிய 11 தொகுதிகளின் கையெழுத்துப் பிரதியை மார்ச் 9-ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிடுகிறார்


ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் பற்றி 21 அறிஞர்களின் வர்ணனைகள் அடங்கிய 11 தொகுதிகளின் கையெழுத்துப் பிரதியை பிரதமர் திரு நரேந்திர மோடி மார்ச் 9-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புதுதில்லியின் லோக் கல்யாண் மார்க்கில் வெளியிடுவார்.

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் டாக்டர் கரண் சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

ஸ்ரீமத் பகவத் கீதை: அசல் கையெழுத்தில் அரிய பல்வேறு சமஸ்கிரத வர்ணனைகள்

பொதுவாக ஸ்ரீமத் பகவத் கீதையின் உரை ஒரு வர்ணனையுடன் வழங்கப்படும். ஸ்ரீமத் பகவத் கீதை பற்றிய விரிவான மற்றும் ஒப்பீட்டு தன்மையுடைய பாராட்டை வழங்குவதற்காக முதன்முதலாக பிரபல இந்திய அறிஞர்களின் பல்வேறு முக்கிய வர்ணணைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

தர்மார்த் அறக்கட்டளையால் வெளியிடப்படும் இந்த கையெழுத்துப் பிரதி, சங்கர் பாஷ்யா முதல் பாசனுவடா வரை உள்ள இந்திய கையெழுத்து நுணுக்கங்களின் வகைகளையும் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் தர்மார்த் அறக்கட்டளையின் தலைமை அறங்காவலராக டாக்டர் கரண் சிங் பொறுப்பு வகிக்கிறார்.