நண்பர்களே,
நான் உங்கள் அனைவரிடமும் பேசுவதை மிகவும் ரசித்தேன். நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக நாட்டின் இளைய தலைமுறையினர் இரவு பகலாக உழைத்து வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஹேக்கத்தான்களிலிருந்து பெறப்பட்ட தீர்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ஹேக்கத்தான்களில் பங்கேற்ற பல மாணவர்கள் சொந்தமாகப் புத்தொழில் நிறுவனங்களையும் தொடங்கியுள்ளனர். இந்தப் புத்தொழில் மற்றும் தீர்வுகள் அரசுக்கும் சமூகத்திற்கும் உதவுகின்றன. இன்று நடைபெறும் இந்த ஹேக்கத்தானில் பங்கேற்கும் அணிகள் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் உத்வேகம் அளிக்கிறது.
நண்பர்களே,
‘ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தன்’ என்ற தாரக மந்திரத்துடன் 21-ம் நூற்றாண்டின் பாரதம் முன்னேறி வருகிறது. எதுவும் நடக்காது, நாட்டை மாற்ற முடியாது என்ற மனநிலையில் இருந்து ஒவ்வொரு இந்தியரும் வெளியேறியுள்ளனர். இந்தப் புதிய அணுகுமுறையின் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 10 வது பெரிய பொருளாதாரத்திலிருந்து 5 வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
நண்பர்களே,
இன்று, பல்வேறு களங்களைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இங்கே உள்ளனர். காலத்தின் முக்கியத்துவத்தையும், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலக்குகளை அடைவதன் அர்த்தத்தையும் நீங்கள் அனைவரும் புரிந்துகொள்கிறீர்கள். நமது ஒவ்வொரு முயற்சியும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு பாரதத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் ஒரு திருப்புமுனையில் நாம் இன்று இருக்கிறோம். இந்தத் தனித்துவமான நேரத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டும். இது தனித்துவமானது, ஏனெனில் பல காரணிகள் ஒன்றிணைகின்றன. இந்தியா இன்று உலகின் இளைய நாடுகளில் ஒன்றாகும். இந்தியா இன்று உலக அளவில் மிகப்பெரிய திறமையாளர்களைக் கொண்டுள்ளது. இந்தியா இன்று ஒரு நிலையான மற்றும் வலுவான அரசைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் இன்று வரலாறு காணாத வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நண்பர்களே,
தொழில்நுட்பம் நம் வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதியாக மாறியுள்ள நேரம் இது. இன்று நம் வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் தாக்கம் கடந்த காலத்தில் இல்லாத அளவிற்கு ஈடு இணையற்றது. எனவே, உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களின் பங்கு முக்கியமானது.
நண்பர்களே,
சுதந்திரத்தின் அமிர்த காலம் அதாவது வரவிருக்கும் 25 ஆண்டுகள், 2047-ஐ நோக்கிய நாட்டின் பயணத்தை மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையின் முக்கியமான ஆண்டுகளையும் குறிக்கிறது. இரண்டு பயணங்களும் அருகருகே விரிவடைகின்றன. ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை’ உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நண்பர்களே,
உலகத்தின் இன்றைய பார்வை உங்களைப் போன்ற இளம் மனங்களின் மீதே இருக்கிறது. உலகளாவிய சவால்களுக்குக் குறைந்த செலவு, தரம், நிலையான மற்றும் அளவிடக்கூடிய தீர்வுகளை பாரத் வழங்கும் என்று உலகம் நம்புகிறது. நமது சந்திரயான் திட்டம் உலகின் எதிர்பார்ப்பை பெரிதும் அதிகரித்துள்ளது. இந்த எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு, பல்வேறு துறைகளில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும். நாட்டின் நவீனத் தேவைகளை மனதில் கொண்டு, உங்கள் போக்கை வகுக்க வேண்டும்.
நண்பர்களே,
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் குறிக்கோள் நாட்டின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதும், தீர்வுகள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதும் ஆகும். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முயற்சிக்கும் போதெல்லாம், புதுமைகளைப் புகுத்தும் போதெல்லாம், ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ மற்றும் ‘தற்சார்பு இந்தியா’ ஆகியவற்றின் தீர்வை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும், அது சிறந்ததாக இருக்க வேண்டும். உலகம் உங்களைப் பின்தொடரும் வகையில் நீங்கள் வேலை செய்ய வேண்டும். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி!
***
(Release ID: 1988473)
ANU/SMB/IR/RR
Interacting with the young innovators at the Grand Finale of Smart India Hackathon 2023. Their problem-solving capabilities & ingenuity to address complex challenges is remarkable. https://t.co/frHyct8OGe
— Narendra Modi (@narendramodi) December 19, 2023
India of 21st century is moving forward with the mantra of 'Jai Jawan, Jai Kisan, Jai Vigyan and Jai Anusandhan.' pic.twitter.com/ncxp1WAQRs
— PMO India (@PMOIndia) December 19, 2023
Today we are at a turning point in time, where every effort of ours will strengthen the foundation of the India of the next thousand years. pic.twitter.com/ToRmk0NGLJ
— PMO India (@PMOIndia) December 19, 2023
India's time has come. pic.twitter.com/Et0QfkpO4v
— PMO India (@PMOIndia) December 19, 2023
To make India developed, we all have to work together.
— PMO India (@PMOIndia) December 19, 2023
Our goal must be – Aatmanirbhar Bharat. pic.twitter.com/NJlMi7d43R
The world is confident that India can provide low-cost, quality, sustainable and scalable solutions to global challenges. pic.twitter.com/jtqufQ8PF3
— PMO India (@PMOIndia) December 19, 2023