ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
02 Mar, 2019
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களிடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று, காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் நடைபெற்ற ஹேக்கத்தானில் பங்கேற்ற பல்வேறு மாணவர் குழுக்களுடன் அவர் கலந்துரையாடினார். வேளாண்மை, நிதி, ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் கல்வி போன்ற பல்வேறு அம்சங்கள் மாணவர்களுடனான கலந்துரையாடலில் இடம் பெற்றது.
தேசிய அளவில் புதுமைகளை புகுத்துவதற்காக வெளிப்படையாக நடைபெற்ற ஒரு மாபெரும் நிகழ்ச்சிதான் இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்று அவர் குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரம் அதி வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். புதிய தொழில் தொடங்குவதில் இந்தியா தற்போது 3-வது பெரிய நாடாக திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.