Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஷில்லாங் சேம்பர் சேர்ந்திசைக் குழுவைச் சேர்ந்த திரு நீல் நாங்கின்ரிஹ் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்


ஷில்லாங் சேம்பர் சேர்ந்திசைக் குழுவை உருவாக்கியவரும் நடத்தியருவமான  திரு நீல் நாங்கின்ரிஹ் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர  மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில், பிரதமர்  கூறியிருப்பதாவது:

உலக அளவில் ரசிகர்களைக் குவித்துள்ள தலைசிறந்த ஷில்லாங் சேம்பர் சேர்ந்திசைக் குழுவை உருவாக்கியவர் திரு நீல் நாங்கின்ரிஹ் அவர்களின் வியத்தகு நிகழ்ச்சிகளை  நானும் பார்த்திருக்கிறேன். அவர் வெகுவிரைவிலேயே நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். அவரது படைப்பாக்கம் எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் அவரை நேசிப்பவர்களுக்கும் இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.