Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வெளிநாட்டுத் தலைவர்களுக்கான இலங்கையின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது


வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் இலங்கையின் மிக உயர்ந்த விருதைப் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் திரு அனுரகுமார திசநாயகா இன்று (05.04.2025) வழங்கினார். இந்திய தலைவர் ஒருவர் இலங்கையின் உயரிய விருதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தியாஇலங்கை நட்புறவை வலுப்படுத்துவதில் நீடித்த பங்களிப்பை வழங்கியதற்காக பிரதமருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

2. இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்தியாஇலங்கை இடையேயான சிறப்பு நட்புறவு, இரு நாட்டு மக்களுக்கு இடையேயான பழமையான உறவுகளுக்கு இந்த கௌரவத்தை அர்ப்பணித்தார்.

***

(Release ID: 2119277)

PLM/RJ