Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியக் குடியரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பப்புவா நியூகினியாவின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே கடந்த ஜூலை 28 –ம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதில் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

விவரங்கள்:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் உருமாற்ற முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும். 3 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும்.

தாக்கம்:

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) துறையில், அரசுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடையே இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஒத்துழைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பின்னணி:

தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக பல நாடுகள் மற்றும் பலதரப்பு முகமைகளுடன், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒத்துழைத்து வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு முன்முயற்சிகளுடன் இணைந்து, நாட்டை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாகவும், அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்ற இது உதவுகிறது.  

         ***

ANU/SMB/PKV/AG/KPG