Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வீட்டுவேலைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் ஒத்துழைக்க இந்தியா-குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வீட்டுவேலைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் ஒத்துழைக்க இந்தியா-குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குவைத் நாட்டில் வேலைக்கு அமர்த்தப்படும் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக் கட்டமைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டுள்ளது. தொடக்கத்தில் இதன் செல்லுபடியாகும் காலம் ஐந்தாண்டுகளாக இருந்தாலும் பின்னர் தாமாகவே புதுப்பிக்கக்கூடியதாகும்.

இதன் மூலம் குவைத்தில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3,00,000 வீட்டுவேலைத் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இவர்களில் 90,000 பெண்களும் அடங்குவர்.

*****