Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விளாடிவோஸ்டாக் நகரில் நடந்த 6வது கிழக்கு பொருளாதார அமைப்பு கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

விளாடிவோஸ்டாக் நகரில் நடந்த 6வது கிழக்கு பொருளாதார அமைப்பு கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்


ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில், 2021 செப்டம்பர் 3ம் தேதி நடந்த 6வது கிழக்கு பொருளாதார அமைப்பு (EEF) கூட்டத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். 

கடந்த 2019ம் ஆண்டு நடந்த 5வது இஇஎப் கூட்டத்தில் பிரதமர், தலைமை விருந்தினராக முதல் முறையாக கலந்து கொண்டது நினைவிருக்கலாம்.

‘தொலைதூர கிழக்கு ரஷ்யா’ உருவாக்கத்தில் அதிபர் புதினின் தொலைநோக்கை பாராட்டிய பிரதமர், இந்த விஷயத்தில்,  இந்தியாவின் ‘கிழக்கு கொள்கை செயல்பாடு’-வின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் நம்பகமான கூட்டு நாடாக இருக்க இந்தியாவின் உறுதியை வலியுறுத்தினார்.

தொலைதூர கிழக்கு ரஷ்யா உருவாக்கத்தில், இந்தியா மற்றும் ரஷ்யாவின் இயற்கையான உறவை அவர் சுட்டிக் காட்டினார்.

‘சிறப்பு மற்றும் சலுகை பெற்ற கூட்டு யுக்திக்கு’ ஏற்ப இரு தரப்பினருக்கும் இடையே அதிக பொருளாதார மற்றும் வர்த்தக ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.  சுகாதாரம் மற்றும் மருந்து துறைகள் கூட்டாக செயல்படுவதில் முக்கியமானது எனவும், இந்த சூழல் பெருந்தொற்று சமயத்தில் ஏற்பட்டது எனவும் அவர் சுட்டிக் காட்டினார். வைரம், நிலக்கரி, எஃகு, மரம் போன்ற துறைகளும் பொருளாதார ஒத்துழைப்புக்கு சாத்தியமானவை என அவர் குறிப்பிட்டார்.  

2019-ம் ஆண்டு கிழக்கு பொருளாதார அமைப்பு கூட்டத்துக்கு, இந்தியாவின் முதலமைச்சர்கள் வந்ததையும் நினைவுப் படுத்திய பிரதமர், தொலைதூர கிழக்கு ரஷ்யா பிராந்தியத்தைச் சேர்ந்த 11 ஆளுநர்களும் இந்தியா வர அழைப்பு விடுத்தார். 

கொரோனா பெருந்தொற்று சவால்களுக்கு இடையிலும், இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தலைமையில் இந்திய முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் அடங்கிய  இந்திய குழுவினர் , கிழக்கு பொருளாதார அமைப்புக்குள் வரும் இந்தியா-ரஷ்யா வர்த்தக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.

குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி மற்றும் ரஷ்யாவின் சஹா-யகுத்தியா பகுதி ஆளுநர்  இடையேயான ஆன்லைன் கூட்டம், கிழக்கு பொருளாதார அமைப்பு கூட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 2ம் தேதி நடந்தது.  பல துறைகளில் இருந்து இந்தியாவின் பிரபல நிறுவனங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், இந்த கூட்டங்களில் ஆன்லைன் மூலம் பங்கேற்கவுள்ளனர்.    

*******