Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விண்வெளியை அமைதி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியாவின் பிரதிநிதியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் ஓமன் நாட்டின் பிரதிநிதியாக அந்நாட்டு போக்குவரத்து தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கும் இடையே விண்வெளியை அமைதிப் பணிகளுக்கு ஈடுபடுத்துவதற்கென மஸ்கட்டில் 2018 பிப்ரவரி மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது.

விவரங்கள் :

  • விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், தொலையுணர்வு பயன்பாடு, செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிகாட்டுதல், விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் ஆய்வு, விண்வெளி வாகனங்கள் மற்றும் விண்வெளி அமைப்புகள், தரை அமைப்புகள் பயன்பாடு, விண்வெளி தொழில்நுட்ப பயன்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவியல் துறை / இஸ்ரோ மற்றும் போக்குவரத்து, தொலைத்தொடர்பு அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து உறுப்பினர்களுடன் கூட்டுப்பணிக்குழு அமைப்பதற்கு வகை செய்கிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான காலக்கெடுத்திட்டம் உருவாக்குவதிலும் அமல்படுத்துவதிலும்  இந்தக்குழு பணியாற்றும்.
  • புதிய ஆராய்ச்சி நடவடிக்கைகள் தொலையுணர்வுத்துறையில் புதிய சாத்தியக்கூறுகள், செயற்கைக்கோள் வழிகாட்டும் அமைப்பு, விண்வெளி விஞ்ஞானம், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் உத்வேகம் அளிக்கும்.

அமலாக்க அணுகுமுறை மற்றும் இலக்குகள்:

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட்டுப்பணிக்குழு அமைப்பதற்கு வகை செய்கிறது இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான காலக்கெடு திட்டம் உருவாக்குவதிலும் அமல்படுத்துவதிலும் இந்தக் குழு பணியாற்றும்.

பலன்கள் :

     மனித குலத்தின் நன்மைக்கென விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் துறையில் கூட்டுச்செயல்களை உருவாக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பயன்படும். நாட்டின் அனைத்துப் பிரிவினர்  மற்றும் மண்டலங்கள் இதனால் பலன் பெறும்.

தாக்கம்:

     ஓமன் சுல்தானகத்துடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மனித குலத்தின் நன்மைக்கென விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் துறையில் கூட்டுச்செயல்களை உருவாக்க பயன்படும்.

பின்னணி :

  • தனது விண்வெளி திட்டத்தை உருவாக்க ஓமன் சுல்தானகம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்தது. ஓமன் நாட்டின் தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த 4 உறுப்பினர் குழு 2011 மார்ச் மாதம் இஸ்ரோவுக்கு பயணமாக வந்தது. இஸ்ரோ அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்திய இந்த குழு இஸ்ரோவின் பல தொழில்நுட்ப வசதிகளை பார்வையிட்டது. 2016 மே மாதம் ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரிடம் ஓமன் சுல்தானகம் இஸ்ரோவுடன் விண்வெளிப் பயன்பாடுகளில் ஒத்துழைக்க ஆர்வம் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தது.
  • இதன் அடிப்படையில் இருதரப்பினரும் விண்வெளியை அமைதிச் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தன. இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பில் இஸ்ரோவும் ஓமன் அரசின் சார்பில் அந்நாட்டு போக்குவரத்து, தொலைத்தொடர்பு அமைச்சகமும், 2018 பிப்ரவரி 11-ஆம் தேதி மஸ்கட்டில் கையெழுத்திட்டன.

——–