Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விஜய் தினத்தை முன்னிட்டு துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி


விஜய் திவஸ் எனப்படும் வெற்றி தினத்தை  முன்னிட்டு, 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியாவுக்காக கடமை உணர்வுடன் சேவை செய்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது :

“விஜய் திவஸ் தினமான இன்று, 1971-ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக கடமை உணர்வுடன் சேவை செய்து, ஒரு தீர்க்கமான வெற்றியை உறுதி செய்த அனைத்து துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் நாம் மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம். அவர்களது வீரமும், அர்ப்பணிப்பும் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. அவர்களின் தியாகங்களும், அசைக்க முடியாத உத்வேகமும் மக்களின் இதயங்களிலும், நமது தேசத்தின் வரலாற்றிலும் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்களின் தைரியத்தை இந்தியா வணங்குகிறது, அவர்களின் அசைக்க முடியாத உணர்வை நினைவில் கொள்கிறது.”

*******

ANU/RB/PKV/DL