Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விசாகப்பட்டினத்துடன் செகந்திராபாத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்


விசாகப்பட்டினத்துடன் செகந்திராபாத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஜனவரி 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமர் காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

இந்த சேவை, இந்திய ரயில்வேத் துறையால் இயக்கப்படும் 8-வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையாகும். தெலுங்கு மொழி பேசும் தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோ மீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரயில் சேவை இது   என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வந்தே பாரத் விரைவு ரயில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணிகளுக்கு உயர்தர வசதிகள் மற்றும் வேகமான, சொகுசான பயணம் அமையும்.

***

AP/GS/KPG/RJ